ஜோதிமணியை சைலன்ட்டாக துவம்சம் செய்ய தயார் நிலையில் அண்ணாமலை..! ஜோதிமணியின் கதறலின் பின்னணி காரணம் என்ன.?

0
Follow on Google News

சமீபத்தில் பாஜக முக்கிய தலைவர் குறித்து சர்ச்சை கூறிய வகையில் வீடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த பாஜக முக்கிய தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார், இதனை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட யூ டுயூபர் மதன் ரவிசந்திரன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அந்த ஆடியோ மக்கள் மத்தியில் அண்ணாமலைக்கு ஆதரவாகவும், மதனுக்கு எதிராகவும் திரும்பியது. இதனை தொடர்ந்து மதன் அமைதியானார், இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்து இந்த விவகாரத்தில் அண்ணாமலை தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அடம் பிடித்து வருகிறார் ஜோதிமணி.

அண்ணாமலையை குறி வைத்து ஜோதிமணி அரசியல் செய்வதின் பின்னணி குறித்து விசாரித்ததில், அடுத்த மூன்று வருடங்களில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அண்ணாமலை பாஜக வேட்பாளராக போட்டியிடலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது அந்த தொகுதியில் எம்பியாக இருக்கும் ஜோதிமணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக பொய்யான குற்றசாட்டுகளை வைத்து அரசியல் செய்ய தொடங்கியுள்ளதாக கூறபடுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மோடி எதிர்ப்பு, பாஜக எதிப்பு, மற்றும் திமுக தயவில் வெற்றி பெற்ற ஜோதிமணி, தற்போது அரசியல் காலத்தில் பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு வலுவிழந்துள்ள நிலையில், மேலும் தற்போது புதியதாக ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மறைமுகமாக மின் கட்டணம் உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றையால் பொது மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி உருவாகி வருகிறது.

இந்த அதிருப்தி நாடாளுமன்ற தேர்தலின் பொது திமுக எதிர்ப்பு அலையாக நிச்சயம் மாறும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள், இந்நிலையில் தனக்கு எதிராக களம் இறங்கு வேட்பாளர் மீது பொய்யான தகவலை பரப்பி அவரின் இமேஜை டேமேஜ் செய்யும் முயற்சியில் அண்ணாமலைக்கு எதிராக ஜோதிமணியின் அரசியல் அவருக்கு எதிராக திருப்பியுள்ளது, பாஜகவில் ஏதாவது பெண் ஒருவர் தான் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தாரா.?

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து ஜோதிமணி கள்ள மௌனம் காப்பது ஏன்.? என்று சரமாரியான கேள்வி எழுந்து வருகிறது. மேலும் இது குறித்து கரூரை சேர்ந்த பாஜகவினர் ஒருவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியை களத்தில் இறங்கி துவம்சம் செய்ய தயாராக இருக்கிறார் மாநில தலைவர் அண்ணாமலை என்றும் அதுவரை ஜோதிமணி கதறி கொண்டே இருக்கட்டும் அவரை நாங்கள் ஒரு பொருட்டாவே நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.