எடப்பாடி க்கு அமித்ஷா வெச்ச செக்… முதல்வர் வேட்பாளரில் உள்ள ட்விஸ்ட்… அரசியல் சாணக்கியரின் ராஜதந்திரம்…

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மெகா கூட்டணி அமைத்து பாஜக தனித்து 11 சதவிகித வாக்கு வங்கியை தமிழகத்தில் நிரூபித்து காண்பித்தது. மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் வீசிய அண்ணாமலை அலை, மோடி அலை பல நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்தது.

கொங்கு எங்கள் கோட்டை என கொக்கரித்து வந்த அதிமுக கோவை நாடாளுமன்ற தொகுதியிலே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு வந்த தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு மாற்று இனி பாஜக தான் என்கிற மனநிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டதை வெளிப்படுத்தியது. மேலும் பாஜகவினருக்கும் உற்சாகத்தை கொடுத்தது.

ஆனால் இந்த அனைத்தையும் மிக உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும், மேலும் அதிமுக – பாஜக தனித்து போட்டியிடுவதால் அது பாஜகவுக்கு வளர்ச்சியை கொடுத்தாலும், திமுகவை வீழ்த்துவது மிக பெரிய சவாலாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஏற்பாடு செய்தார் அமித்ஷா.

அதே நேரத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக 10 தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல வில்லை என்றால், மிக பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி க்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள்.

குறிப்பாக அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை முன்னிறுத்தி எடப்பாடி க்கு எதிராக போர் போர் கொடி தூக்க வைத்தது டெல்லி பாஜக, மேலும் அதிமுக முக்கிய தலைவர்கள் செங்கோட்டையன் பின்னால் ஆதரவாக அணி திரள தொடங்கினார்கள். இது ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிசாமி உறவினருக்கு சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் சுமார் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையும், மேலும் நகை கைப்பற்றப்பட்ட தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து எடப்பாடியை பிரச்சனைகள் சுற்றி வளைக்க பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது, அதே போன்று அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் இதன் பின்பு தான் அமித்ஷாவின் அரசியல் சாணக்கிய தனம் வெளியானது, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி தரப்பு கொக்கரிக்க, 2026 தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமையும் என இரு தடவை இல்லை சுமார் மூன்று முறை தெரிவித்து விட்டார் அமித்ஷா.

மேலும் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்யும் என ஒரு ட்விஸ்ட் வைத்தார் அமித்ஷா, மேலும் தற்பொழுது பாஜகவை விட்டு சென்றால் எடப்பாடி தலைமையிலான அதிமுக தனித்து தான் நிற்க்க வேண்டும், விஜய் அவருடைய கட்சி சார்பாக அவர் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து விட்டார். அப்படி ஒரு சூழலில் கூட்டணி ஆட்சி தான் என்பதை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி பாஜக உடன் கூட்டணியில் தொடர வேண்டிய கட்டாயம் தான் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பலரும் பாஜக நன்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்த சுழலில், எதற்காக அதிமுக உடன் கூட்டணி வைத்தார் அமித்சா என்கிற கேள்விக்கு தற்பொழுது மெல்ல விடை கிடைக்க தொடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறி விட கூடாது என்பதற்காக கூட்டணி, கூட்டணி ஆட்சியில் பாஜகவுக்கு துணை முதல்வர், அமைச்சரவையில் இடம் இது தான் அமித்ஸாவின் தமிழ்நாடு அரசியல் பார்முலா என கூறப்படுகிறது.