வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் வழக்கம் போல் சீமான் தனித்து போட்டியிடுகிறார், திமுக , அதிமுக – பாஜக கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி என மும்முனை போட்டி வரும் 2026 சட்டசபை தேர்தலில் நிலவ இருக்கிறது. இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கூட்டணிக்குள் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை உள்ளே கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் தேமுதிக வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு செல்ல தயாராகி விட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள், அதே நேரத்தில் பாமகவை பொறுத்த வரை, அம்புமணி ராமதாஸ் பாஜக பக்கம் செல்லவும், ராமதாஸ் திமுக பக்கம் செல்லவும் தயாராக இருக்கிறார்கள், இதனால் பாமக கட்சிக்குள்ளே பல குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் திமுகவவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில்,கூட்டணியில் இருந்து முதலில் திருமாவளவனை விரட்டி விட வேண்டும், இல்லை என்றால் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களையும் குழப்பி நமக்கு எதிராக திருப்பி விடுவார் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திமுக தலைமையை மிரட்டும் வகையில் பேசி வரும் திருமாவளவன், இதற்கு முன்பு அதிமுக உடன் திரைமறைவில் தொடர்பு வைத்து கொண்டு, திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளிடம் நமக்கு பெரிய ஆஃபர் எடப்பாடியிடம் உள்ளது வாங்க அங்கே சென்று விடுவோம் என கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளையும் திமுகவுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்த திருமாவளவன்,
தற்பொழுது விஜய் உடன் ஆதவ் அர்ஜுன் மூலமா தொடர்பு வைத்து கொண்டு அதே வேலையை திமுகவுக்கு எதிராக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால், திருமாவளவன் தானாக வெளியே சென்று விடுவார், அதை ஒரு கூட்டணி கட்சி தலைவர் மூலம் செய்ய வேண்டும், அப்படி செய்தால் தான் முதலில் கூட்டணி கட்சிக்கு திருமாவுக்கு தொடர்பு துண்டிக்க படும் என முடிவு செய்த திமுக தலைமை.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை மூலம் பாமக தலைவர் ராமதாசியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இது திருமா வளவனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னிய அரசு, தமிழகத்தில் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை; திமுக கூட்டணியில் விசிகதான் இரண்டாவது பெரிய கட்சி’ என்றும் பேசியது விசிக – காங்கிரஸ் இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை போர் முற்றியது.
இந்நிலையில் ஆங்கில நாளிதலுக்கு பேட்டியளித்த மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகத்திடம் ‘வரும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைக்குமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எதிர்பாராத விதமாக பதிலளித்த சண்முகம், ‘விஜய் எடுக்கும் முடிவு பொறுத்துதான் திமுக வெற்றி முடியும்’ என கூறியிருந்தார்.
அதேபோல பல இடங்களில் கூட்டணி இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் பேசி வருகிறார் சண்முகம். பாஜக எதிர்ப்பு, சனாதனம் எதிர்ப்பு என்ற புள்ளியில் திமுக கூட்டணியில் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் நெருக்கத்தில் சீட்டு பேரம் வழியாக உரிய மரியாதையை எதிர்பார்ப்பதையே சண்முகத்தின் பேச்சு காட்டுகிறது. விசிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளையும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ள நிலையில் விஜய் உடன் விசிக கமியூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இது திமுகவுக்கு வரு தேர்தலில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தி அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிக்கு வழி வகை செய்யும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

