நீயெல்லாம் ஒரு. ? திருமாவுக்கு இப்படியா நடிகை காயத்ரி ரகுராம் பதிலளிப்பது..! என்ன பதில் தெரியுமா.?

0
Follow on Google News

கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி,பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு போட்டியாக அங்கே இந்து மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசிக கட்சி  தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து நாடாளுளுமன்றத்தில் பேசியதாவது,  நாடு முழுவதும் இன்று பள்ளி மாணவர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. 

ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுப் படுத்தக்கூடிய சக்திகளுக்கு  எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இதற்கு மாற்றுக்கு குரலாக ஜெய் பீம் மற்றும் அல்லாகு அக்பர் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது,  எனவே இந்த அவையில் நான் ஓங்கி முழங்குகிறேன் ஜெய் பீம் அல்லாகு அக்பர் என திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

மேலும் திருமாவளவன், தனது டிவீட்டர் பக்கத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவின் கல்லூரி நுழைவு வாயிலில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட மாணவர்கள் மத்தியில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் அல்லா கூ அஃபர் என கோஷமிட்ட அந்த பெண்ணை சுற்றி காவி நிறத்தில் நரிகள் ஊளையிடுவது போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும், காவி நிறத்தில் இருக்கும் நரியின் வாயிலில் திரிசூலம் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படம்.

என இது போன்ற புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன், தங்கையே.. உன் போர்க்குரல் உலகுக்கு புதுப் பொருளை உணர்த்தியுள்ளது. அல்லாஹூ அக்பர், பெண்மை மிகப்பெரியது
சுதந்திரம் மிகப்பெரியது, சமூகநீதி மிகப்பெரியது, சமத்துவம் மிகப்பெரியது என பதிவு செய்திருந்தார் திருமாவளவன், இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக கலை கலாச்சார பிரிவு தலைவி நடிகை காயத்ரி ரகுராம்,

நீ எல்லாம் ஒரு… என குறிப்பிட்டு கோடிட்ட இடத்தை தயவு செய்து நிரப்பவும் என நீ எல்லாம் ஒரு என்பதுடன் நிறுத்தியுள்ளார், மேலும் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் உங்கள் புகைப்படம் பயன்படுத்தப்படவில்லை என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம், அதனால் திமுக முன் மற்றும் கேமரா முன் சமூக நீதிக்காக மண்டியிட்டு அழுதீர்கள் அந்த நிகழ்வின் கார்ட்டூனை முதலில் வைக்கவும் என தெரிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.