விரட்டிவிட்ட அதிமுக ..கண்டுகொள்ளாத பாஜக.! திமுக பக்கம் துண்டை போடும் சரத்குமார்.!

0
Follow on Google News

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருச்செந்துர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார், அதன் பின் நடந்த இடைதேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர் சரத்குமாரை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு பொருட்டாக கூட அவரை ஏற்று கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், இம்முறை அதிமுக கூட்டணியில் சரத்குமார் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியலில் தலையை காட்டும் சரத்குமார், மற்ற நேரங்களில் அரசியலுக்கு விடுப்பு விடுத்துவிடுவார், இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவில் சரத்குமார் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட விரும்பும் தொகுதியை தெரிவித்து அந்த தொகுதியில் தேர்தல் பணியை தொடங்க இருபதாக அதிமுக தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளார் சரத்குமார், அதற்கு அதிமுக தலைமை தற்போது இது குறித்து சிந்திக்க நேரம் இல்லை, இதை விட சில முக்கிய வேலைகள் உள்ளது என சரத்குமாரை அலட்சிய படுத்தியுள்ளது அதிமுக தலைமை. இது குறித்து பாஜகவிடம் சரத்குமார் பேச முயற்சி செய்த போது பாஜகவும் சரத்குமாரை கண்டுகொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து இனி அதிமுகவை நம்பமுடியாது என முடிவெடுத்து திமுக பக்கம் தாவுவதற்கு முடிவெடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவு செய்து திமுகவுக்கு துண்டை போட்டு வருகிறார், மேலும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சரத்குமார், ஆனால் திமுகவும் சரத்குமாரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.