புதிய கட்சி கிடையாது ஆனால் அரசியலுக்கு வருவது உறுதி.! ரஜினியின் முடிவு இது தான்.!

0
Follow on Google News

நவம்பர் 21ம் தேதி மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு சில நாட்களுக்கு முன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்தை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார், சுமார் இரண்டு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த சந்திப்பின் போது புதிய கட்சி தொடங்க வாய்ப்புகள் இல்லை என்ற தனது நிலைப்பாட்டை குருமூர்த்தியிடன் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த், இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் நடந்த சந்திப்பு பற்றி அமித்ஷாவை தொடர்பு கொண்டு எடுத்துரைத்துள்ளார் குருமூர்த்தி, இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கவில்லை என்பதால் அவரை பாஜகவுக்கு ஆதரவாக எப்படி பயன்படுத்துவது என்று குருமூர்த்தி உடன் ஆலோசனை நடத்தியுள்ளார் அமித்ஷா.

இந்நிலையில் ரஜினியின் புதிய கட்சி வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதை தொடர்ந்து, திடீர் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டு சென்னையில் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைப்பது குறித்து ஆலோசனை நடாத்தியுள்ளார்கள், ஆனால் இதற்கு ரஜினிகாந்த் தயராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ள ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகள் திருப்தி இல்லை என்றும், மேலும் பணம் சம்பாரிக்க நினைக்கும் நபர்கள் என்னுடன் இருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து ரஜினி தன்னுடைய நிலைப்பாடு குறித்து அமித்ஷாவுக்கு தெரிவித்த பின்பு தான் அமித்ஷா தமிழகம் வந்து அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ததாக கூறபடுகிறது.

இந்நிலையில் வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்காக வாய்ப்புகள் குறைவு என்றும், ஆகையால் வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.