உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகித்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி கேரளாவின் பம்பையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் ‘லோக ஐயப்ப சங்கமம்’ என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழகம் வந்த கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசன் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் கேரளா மட்டுமல்லாது கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேரளா அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்த கேரள அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ”சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரும், திமுக தலைவருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உலக ஐயப்ப சங்கம மாநாட்டில் பங்கேற்பது இந்துக்களை அவமதிப்பதற்குச் சமம்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்” என கேரள இந்து மக்கள் ஒரு தரப்பினர் கடும் தெரிவித்து வருகிறார்.
இது குறித்து கேரள பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் , ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான் என தெரிவித்தவர்.
மேலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்; இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள்.” என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரளா திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் ‘லோக ஐயப்ப சங்கமம்’ என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடில் கலந்து கொள்ள கடும் எதிர்ப்பை கேரளா பாஜக தலைவர் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா.? என விவாதம் அனல் பறந்த நிலையில், இந்த நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

