நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸூக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர்களின் மகள் மால்தி மேரி ஜோன்ஸூக்கு 3 வயதாகிறது. வாடகைத்தாய் மூலம் மால்திக்கு மேரிக்கு தாயான பிரியங்கா சோப்ராவை பலரும் பலவிதமாக விமர்சித்தார்கள். அதை பார்த்து முதலில் அமைதியாக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, பின்னர் தன்னால் தாயாக முடியாமல் போனதால் வாடகைத் தாயை தேடி சென்றதாக கூறினார்.
தற்போது பிரியங்கா இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக எஸ் எஸ் எம் பி 29 என்ற படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கென்யாவில் நடந்து வருகிறது. ராஜமவுலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பது இதுவே முதல் முறையாகும். நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுளளது.

முன்னதாக இந்த படத்தில் நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா 30 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டாராம். அது தனக்கு கட்டுபடி ஆகாது என்று சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வேறு வழியின்றி 30 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசி அவரை நடிக்க கமிட் செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்போதைய தென்னிந்திய நடிகைகளில் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரு நடிகை பிரியங்கா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் கூறியதாவது, நான் படுக்கையில் உட்கார மாட்டேன். சாப்பிட மாட்டேன். புத்தகம் வாசிக்க மாட்டேன். டிவி பார்க்க மாட்டேன். அது என்னால் முடியாது என்று நிக் ஜோன்ஸ் கூறியிருக்கிறார். அப்போது அவரை நேர்காணல் செய்த பெண், வாழ்க்கையில் மிகப்பெரிய சுகங்களில் ஒன்றை இழந்து விட்டீர்கள். உங்கள் படுக்கை அறையில் டிவி இருக்கிறதா என்று கேட்டார்.
அதைக் கேட்ட நிக் ஜோன்ஸ், ஆமாம், டிவி இருக்கிறது. என் மனைவி படுக்கையில் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பார். நான் படுக்கையில் அமராமல் ஒரு சேரை இழுத்து பெட்டுக்கு அருகில் போட்டு அமர்ந்து டிவி பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் நிக் ஜோன்ஸ் ஓகே கிடையாது. படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டு டிவி பார்ப்பது சுகமோ சுகம். நாங்கள் எல்லாம் பெட்டில் அமர்ந்து சாப்பாடு, ஸ்நேக்ஸ் சாப்பிடுவோம். போன் பார்ப்போம். அது ஒரு ஃபீலிங் என்று கூறுகிறார்கள்.
இதற்கு மற்றொரு தரப்பினர், நிக் ஜோன்ஸ் சொல்வது மிகவும் சரி. படுக்கையில் தூங்க மட்டுமே செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அதையே அனைத்து வேலைக்கும் பயன்படுத்தினால், தூக்கம் வராது. படுக்கை என்பது டிவி பார்க்க, சாப்பாடு சாப்பிட உதவும் இடம் இல்லை என்கிறார்கள். படுக்கையறை என்பது தூங்குவதற்கு மட்டுமான ஒரு இடம்தான். 70 அல்லது 80 வயது கடந்தவர்களுக்கும் அது தூக்கமும் ஓய்வும் தரும் ஒரு இடமாக தான் இருக்கிறது. ஆனால் திருமணமான புதுமணத் தம்பதியர் மற்றும் கணவன், மனைவிக்கு படுக்கையறை என்பது தாம்பத்தியம் எனப்படும் புனிதமான உறவுக்கான இடமாகவும் அமைகிறது. படுக்கையறை காட்சிகள் என்பதே திரைப்படங்களில் ஒரு கிளுகிளுப்பான சமாச்சாரமாக தான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது என்று சிலர் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

