இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூலி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான நடிகர் விஜய் நடித்த லியோ படத்துடன் ஒப்பிடுகையில், கூலி படம் வசூலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
அதுவும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2.0 நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் ஆகிய படங்களையும் பின்னுக்கு தள்ளி கூலி படம் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது. கூலி படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கூலி படத்தின் கதை மிகவும் பழையதுதான் என்றாலும் மேக்கிங்கில் லோகேஷ் கனகராஜ் லாஜிக் எல்லாம் பார்க்காமல் எப்படியோ ஒப்பேத்தி விட்டார். கூலி படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெறும் என்று தகவல் பரவியது. அந்த வகையில் பலத்த எதிர்பார்ப்பில் இருந்த கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் 85 கோடி ரூபாய்க்கு மேல் டிக்கெட் வசூல் தாண்டியதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ மற்றும் கூலி படங்களின் வசூல் சாதனைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். முதல் நாளில் உலக அளவில் லியோ படம் 148 கோடி ரூபாய் வசூலித்தது. அதே நேரத்தில் கூலி படம் முதல் நாள் உலக அளவில் 151 கோடி ரூபாய் வசூலித்தது. லியோ படத்தை விட கூலி படம் முதல் நாள் வசூலில் முந்தியது. ஆனால் இந்த இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்தான்.
ஏனென்றால் லியோ, கூலி என 2 படங்களையும் இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். ரஜினிகாந்த் மீண்டும் தன்னை வசூல் சக்கரவர்த்தி என்பதை கூலி படத்தில் நிரூபித்து இருக்கிறார். இந்தியா முழுவதும் கூலி படத்திற்கு 65 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனையானது. ஆனால் லியோ படத்துக்கு 4.8 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் 4 நாட்களுக்கு பிறகு விஜயின் லியோ படம் நாலு 403.50 கோடி ரூபாய் வசூலித்தது. அதே நேரத்தில் கூலி படம் 404 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இந்த வெற்றிகள் மூலம் தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் நிரந்தர வெற்றியாளராக மாறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் திரைக்கு வந்த 4 நாட்களில் 379 கோடி ரூபாய் வசூல் செய்தது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் 4 நாட்களில் 308 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. லியோ படம் உலகம் முழுவதும் மொத்தமாக 595 கோடி முதல் 615 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆண்டில் வெளியான லியோ படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதே ஆண்டில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் முதல் இடத்தில் உள்ளது.
இப்போது கூலி படமும் அதே போல் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படி புயலாக மாறி விஜய் படங்களை பின்னுக்கு தள்ளி முந்தியது ரஜினியின் கூலி படம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் கூலி வசூல் இன்னும் பல கோடி ரூபாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

