சமீபத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது, அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறலாமா என்று கருத்து கேட்கப்பட்டிருக்கிறது இதில் சுமார் 132 மாவட்ட செயலாளர்களின் 120 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள், அதில் 95 சதவீதம் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவதே ஆகச் சிறந்தது என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் என்டிஏ கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விஜய் என்ன முடிவு எடுக்க இருக்கிறார் என்கின்ற பரபரப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கு முன்பு விஜயுடன் கூட்டணி அமைக்க அதிமுக விருப்பம் தெரிவித்திருந்தது ஆனால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் பின்பு கரூர் சம்பவத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்காக பாஜக முயற்சி செய்தது, அப்போதும் விஜய் சரியான பதில் கொடுக்கவில்லை, இந்த நிலையில் தற்போது விஜய்யே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவித்திருக்கிறார், அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தேர்தலுக்கு இன்னும் அறுபது நாட்கள் தான் இருக்கிறது,
நாம் நினைப்பது போல் தேர்தல் களம் ரீல்ஸ் போட்டு வாக்குகளை வாங்க முடியாது களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு நம்மிடம் வலுவாக இல்லை, குறிப்பாக 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பணம் படைத்த வேட்பாளர்கள் நம்மிடம் பெரும்பாலும் இல்லை என்கின்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள் மாவட்ட செயலாளர்.
அதே நேரத்தில் சமீபத்தில் கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றி கழகம் கைவசம் சுமார் 15 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என்கின்ற தகவலும் சென்றிருக்கிறது. இதனாலையே விஜய் தங்களுக்கு அவசியம் என்று பாஜக தலைமை உணர்கிறது. அதனாலயே தற்பொழுது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் வகையில் தமிழக வெற்றி கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வரும் பொழுது சுமார் 200 தொகுதிகள் வரை இந்த கூட்டணி வெற்றி பெறும் என்கிறது கருத்து கணிப்புகள்.
அந்த வகையில் மொத்தம் 234 தொகுதிகளில் 134 தொகுதிகளில் அதிமுகவும் சுமார் 45 முதல் 50 தொகுதிகள் வரை தமிழக வெற்றிக்கழகமும் மற்ற 50 தொகுதிகளில் பாஜக பாமக போன்ற மற்ற கட்சிகளும் போட்டியிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் விஜய் சுற்றி இருக்கக்கூடிய ஆதவர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் கூட்டணிக்கு செல்ல விடாமல் விஜயை தடுத்தாலும் கூட.
வரும் சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு தொகுதி விஜய் போட்டியிடும் தொகுதியை மட்டும் வென்று விட்டு வாக்கு சதவீதம் 15 ஆக இருந்தாலும் கூட 2026க்கு பின்பு விஜயின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என்கின்ற அச்சம் விஜய்க்கு வந்திருக்கிறது. அதனாலேயே தற்பொழுது என்டிஏ கூட்டணி பக்கம் விஜய் சாயத் தொடங்கி இருக்கிறார் என்றும்,
விரைவில் இந்த கூட்டணி இறுதி பெற்று தேர்தலில் வெற்றி அடைந்த பின்பு விஜய் 2011 போன்று விஜயகாந்த் போன்று எதிர்க்கட்சித் தலைவராக அமருவாரா அல்லது என் டி ஏ கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவி ஏற்பாரா என்கின்ற விவாதமும் அரசியல் அரங்கில் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

