தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு திமுக தடையாக இருக்காது , நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம் என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாக திமுக தெரிவித்துக் கொண்டாலும், திரை மறைவில் விஜய் முதல்வராக வராமல் இருப்பதற்கு பல சூழ்ச்சிகளை தொடர்ந்து திமுக செய்து வந்தது ஒவ்வொன்றாக அம்பலம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டு சேர்ந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்கு சில திரை மறைவு பேச்சுவார்த்தை திமுக நடத்தியதாக சிவி சண்முகம் போட்டு உடைத்தார். மேலும் அந்த விவகாரம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு அந்த கடைசி நிமிடம் வரை திமுக பல சூழ்ச்சிகளை செய்து ,விஜய் முதல்வராக விடாமல் தடுப்பதற்கான பல முயற்சிகளை செய்ததாக சில தகவல்கள் வெளியாகிறது.

குறிப்பாக எப்படி எம்ஜிஆர் முதல்வராக அறியனை ஏறிய பின்பு தொடர்ந்து அவர் உயிருடன் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதேபோன்று ஒருமுறை முதல்வராக விஜய் அமர்ந்து விட்டால் அடுத்து திமுகவால் காலத்திற்கு ஆட்சி அமர முடியாது என்கின்ற அச்சம் திமுகவின் தலைமை குடும்பத்திற்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு டி வி கே வை மிக எளிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட திமுக, தேர்தலுக்குப் பின்பு தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் இறங்கிய போது, தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் சுமார் பத்து முதல் 20 சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் பலரும் அங்கே இருக்கிறார்கள், அதேபோன்று அதிமுகவை சேர்ந்தவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் பலரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வகையில் அவர்களின் தொடர்பை பயன்படுத்தி திமுக தரப்பிலிருந்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் சுமார் 30 கோடியில் இருந்து 100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் .
ஆனால் தாவேக்காவில் இருந்து திமுகவிற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தாவினால் அச்சமயம் தவெக வால் ஆட்சி அமைப்பதை தடுக்க முடியும், ஆனால் அவர்கள் கட்சி தாவல் சட்டப்படி எம்எல்ஏ பதவியை இழக்கவும் நேரிடும். அப்படி ஒரு சூழல் உருவானால் மீண்டும் அவர்கள் விசில் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக கடினம்.
இந்நிலையில் ஒரு சில தவெக எம்எல்ஏக்கள் தங்களிடம் திமுக பேரம் பேசுவதை தாவேக தலைமைக்கு ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த தகவல் விஜய்க்கு பறந்து இருக்கிறது. இதன் பின்பு தான் முதல்வராக விஜய் பதவி ஏற்பதற்கு முன்பும் சரி , தனி தனிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடைபெற்ற ஓட்டெடுப்பு கடைசி நிமிடம் வரை அனைத்து தவெக எம்எல்ஏக்களும் பத்திரமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்.
அந்த வகையில் கடைசி வரை தி மு க பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தவெக எந்த காரணத்திற்கு கொண்டும் ஆட்சி அமைத்து விடக்கூடாது, முதல்வராக விஜய் அரியணை ஏறி விடக்கூடாது என்று பல்வேறு சூழ்ச்சிகளை செய்தும், அதை எல்லாம் முறியடித்து தான் விஜய் தற்போது முதல்வராக அரியணை ஏறி இருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

