தமிழகமே எதிர்பார்த்த தருணம்… நாள் குறித்த அண்ணாமலை… முடிவுக்கு வெறுக்கிறது விஜயின் ரீல்ஸ் ஆட்சி…

0
Follow on Google News

“வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதை போன்று, 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அமைந்து விட்டது, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக 18 சதவிகித வாக்குகளும் , பாஜக தனியாக 11 சதவிகத வாக்குகளை பெற்ற அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்தால் அடுத்த இரண்டு வருடத்தில் அண்ணாமலையின் அனல் பறக்கும் அரசியல் நடவடிக்கையால் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்து இருக்கும்.

ஆனால் கரை சேர முடியமால் தத்தளித்து கொண்டிருக்கும் அதிமுக உடன் கூட்டணி வைத்தால், குறிப்பாக காலாவதியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தி கூட்டணி அமைத்தால் திமுகவை வீழ்த்தி பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்து விடும் என்று, அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாத சிலரின் தவறான தகவல்களால் காலாவதியான எடப்பாடி உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து படுதோல்வியை பாஜக சந்தித்து இருக்கும் நிலையில்,

இவை அனைத்துமே அண்ணாமலைக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி, அதில் தமிழக பாஜக மிக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறது டெல்லி பாஜக தலைமை. இந்நிலையில் மீண்டும் அண்ணாமலை கையில் தமிழக பாஜகவை ஒப்படைக்க இருக்கும் நிலையில் அடுத்து அண்ணாமலையின் அரசியல் முதல்வர் விஜய்க்கு எதிராக மிக தீவிரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சட்டசபையில் பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல் திணறும் முதல்வர் விஜய் அண்ணாமலை கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் சொல்வர் என்கிற கேள்வி எழுந்துள்ளது, மேலும் அண்ணாமலை விஜய்க்கு எதிராக அரசியல் ஆட்டத்தை தொடங்கும் நேரத்தில் விஜய் மற்ற அரசியல் தலைவர் போன்று கண்டு காணாமல் கடந்து செல்ல முடியாது, அது மக்களின் புரட்சியாக வெடிக்கும் என்பது , கடந்த கால திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைகழக விவகாரம், DMK FILES போன்ற பல சம்பவங்கள் உதாரணம்.

இந்நிலையில் வரும் மே 19ம் தேதி அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் வருகையை எதிர்பார்த்து பாஜகவினர் மட்டுமில்லை ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த ஓரிரு நாட்களில் விஜய்யின் முகத்திரை ஒவோன்றும் கிழிய தொடங்கி இருக்கிறது.

சட்டசபையில் வடிவேல் நீதிமன்ற நகைச்சுவை கட்சியில் வருவது போன்று அது வந்து, அது வந்து என பெ பெ என்று பதில் சொல்ல முடியாமல் விஜய் திணறுவதும், மேலும் ஊழலை ஒழிப்பேன் என ஆட்சிக்கு வந்து விட்டு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கிய லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் கட்டுப்பாட்டில் முதல்வர் விஜய் இயங்குவது என மக்களின் நம்பிக்கையை ஒவ்வொரு நாட்களாக இழந்து வருகிறார் முதல்வர் விஜய்.

அந்த வகையில் சினிமா மோகத்தில் ஏமார்ந்து விட்டோமே என விஜய்க்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படும் வகையில் தற்போதை தமிழக அரசியல் களம் மாறி வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறினால் இனி அந்த ஆண்டவனாலே கூட தமிழக பாஜகவை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த டெல்லி பாஜக தலைமை அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிக்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த போது தனி மெஜாரிட்டியில் ஆட்சியில் இருந்த திமுகவை என்ன கதி கலங்க விட்டார் என்பது நாடறியும், அப்படி இருக்கையில் தவெக தலைவர் விஜய் எம்மாத்திரம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில் அண்ணாமலையை எதிர்பார்த்து தமிழக அரசியல் களம் அதிரடி ஆட்டத்துக்கு தயாராகி வருவதை பார்க்க முடிகிறது.