எதிரி நாடுகளை குலை நடுங்க செய்யும் சைனிக் பள்ளிகள் என்றால் என்ன.?மத்திய பட்ஜெட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள்.!

0
Follow on Google News

2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்தியா முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும்,மேலும் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள். அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம். தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.

சைனிக் பள்ளி என்பது அன்று பிரிட்டனில் ராணுவத்தினரை உருவாக்க நடத்தபட்ட சிறப்பு பள்ளிகளின் சாயல், ராணுவத்தாரும் அதில் பணிபுரியும் பலரும் தங்கள் குழந்தைகளை பொதுபள்ளியில் பயிற்றுவிக்க மனமில்லாது இருந்தார்கள் பிரிட்டன் மேலிடமும் முழு நாட்டுபற்றும் ராணுவமனப்பான்மையும் கொண்ட தூய ராணுவத்தை உருவாக்க அதை தொடங்கியது இப்படி ஒரு பள்ளி இந்தியாவில் உருவாக வேண்டிய அவசியம் 1961ல் சீனா அப்போதைய நேரு தலைமையில் இருந்த இந்தியா மீது சண்டையிடும் வரை இந்தியாவுக்கு அந்த என்ன தோன்றவில்லை.

முதலில் ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரி என்று இந்தியாவில் தொடங்கப்பட்டது, இது முழுக்க முழுக்க ராணுவமனநிலைக்கு மாணவர்களை தயார்படுத்தும் பள்ளி, இந்த பள்ளிகள் பின்பு சமஸ்கிருதத்தில் வெற்றி தேவி எனும் பொருளில் வரும் “சைனிக்” பெயரில் மாற்றபட்டது இதன் இயங்கும் அமைப்பு மிக பெரும் செலவு பிடிப்பது, இந்திய ராணுவம் மற்றும் டி.ஆர்.டி.ஓ போன்ற அதிமுக்கிய அமைப்புகள் கீழ் வருவதால் பராமரிப்பும் இயக்கமும் மிக செலவானவை

இந்தியாவில் இதுவரை 34 பள்ளிகள்தான் உண்டு, தமிழ்நாட்டு உடுமலைபேட்டையிலும் ஒன்று உண்டு, சுருக்கமாக சொன்னால் பால்ய வயதிலே ராணுவத்தில் சிறுவர்களை சேர்த்து பயிற்சி கொடுக்கும் பள்ளி போன்றது இது, இப்பொழுது பிரதமர் மோடி தலைமையிலான அரசு 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கபடும் என அறிவித்திருக்கின்றன,இதில் பட்டம் முடித்து ராணுவத்துக்கு சென்று அதன் வியூகங்களை கற்பதை விட, கற்றுகொண்டு வளர்ந்து ராணுவத்துக்கு இளைஞர்கள் சென்றால் ராணுவம் பலமாகும்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .