வலியில்லாமல் சாகும் இயந்திரத்துக்கு அனுமதி அளித்த நாடு!

0

வலியில்லாமல் மரணத்தை வரவழைக்கும் இயந்திரமான சர்கோ தற்கொலை இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்து நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காப்பாற்றவே முடியாத நோய்களாலும், உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படுபவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கப்படும் நடைமுறை சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இதைக் கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிக் கருணைக் கொலை செய்யப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்தான் சர்கோ சூசைட் பேக் எனும் இயந்திரம்.

இந்த இயந்திரத்துக்குள் சில வாயுக்கள் அனுப்பப்பட்டு கடைசி நேரத்தில் எந்தவித பதற்றமோ வலியோ இல்லாமல் பாதிக்கப்பட்டவரின் உயிர் எடுக்கப்படும். இந்நிலையில் இந்த இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்து நாட்டு அரசு இப்போது அனுமதி அளித்துள்ளது.

error: Content is protected !!