இன்ஸ்டாகிராம் வந்த வினை… கடைசியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது வாழ்க்கை…

0

திருவனந்தபுரம் அரசு போக்குவரத்துத்துறையில் வேலை பார்த்து வரும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன். இவருக்கு பீனா என்ற மனைவியும் மானஷா [24] என்ற மகள் உள்ளார். மனைவி பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மகள் மானஷா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவராக படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகில் தோழிகளுடன் வாடகைக்கு ரூம் எடுத்து படித்து வந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த மானஷாவுக்கு ராஹில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ராஹிலின் நடவடிக்கை மாற்றத்தால் அவரிடம் இருந்து ஒதுங்கினார் மானஷா. இன்ஸ்டாகிராமில் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் ராஹில் விடமால் தொல்லை கொடுத்தால் நடந்தை தந்தையிடம் கூற அவர், கண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ராஹிலிடம் விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஹில் மானஷா தங்கி படித்து வரும் ரூம் அருகிலேயே லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்து மானஷாவை அவர் தங்கி இருக்கும் வீட்டையும் கண்காணித்து வந்தார். மானஷா நடவடிக்கைகளை கண்காணித்து, அவர் தோழிகளுடன் சாப்பிடும் நேரத்தில் மானஷா தங்கி இருக்கும் வீட்டிற்குள் நுழைந்தார். இவரை கண்டதும் மானஷா மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஹில் மானஷாவை மட்டும் தர தர வென அருகில் இருந்த ரூமுக்குள் இழுத்து சென்றார். உடன் தங்கியிருந்த தோழிகள் தங்கியிருந்த வீட்டு ஓனரை அழைக்க செய்வதற்குள், பிறகு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மானஷாவை சுட்டார். ரூமுக்குள் இருந்து டமால் டமால் என்று சத்தம் கேட்க உள்ள சென்று பார்த்தபோது ராஹில், மானஷா, இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இரண்டு போரும் இறந்து விட்டதாக கூறினார்.

தகவல் அறிந்து வந்த கோதமங்கலம் போலீசார் இரண்டு பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டபோது துப்பாக்கி ஒன்று கிடந்தது. இந்த துப்பாக்கியால் ராஹில் மானஷாவை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here