ஐஸ்வர்யா ராஜேஷின் “பூமிகா” பட அப்டேட்…

0
Follow on Google News

விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “பூமிகா” திரைப்படம். கொரோனா பெரும் தொற்றால் திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் பெரும்பாலான படங்கள் ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. தற்போது அதில் சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியிலே வெளியிடுகின்றனர். அந்த வரிசையில் தற்போது பூமிகா இடம் பெற்றுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25வது படம் தான் பூமிகா. இந்த திரைப்படத்தை புதிய இயக்குநரான ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் மலைப் பகுதியில் நடைபெற்றது. இந்த திரைப்படம் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நேரடியாக ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ஒரு ஹாரார் & திரில்லர் திரைப்படம்.

நேற்றுதான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் நேரடியாக சேனி லைவ் ஓடிடியில் தளத்தில் வெளியானது. இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வந்துள்ளதால் பூமிகா திரைப்படத்திற்க்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது