கழகத்துடன் நேரில் நேரடி தொடர்பில் இருப்பது ஏதேனும் மாமா வேலை பார்ப்பதற்காக.? எம்பி செந்திகுமாருக்கு எதிராக பொங்கி எழுந்த உடன்பிறப்பு..

0
Follow on Google News

திமுக எம்பி செந்தில்குமாரை அவர் தொகுதி மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எந்த நேரமும் அவரை டிவீட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் என்ற அளவுக்கு சமூக வலைதளத்தில் பிசியாக பொழுதை கழித்துக்கொண்டிருப்பவர் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார். தொகுதி வளர்ச்சிக்காக தர்மபுரி மக்கள் இவருக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினால். ஆனால் இவர் தொகுதி வளர்ச்சிக்காக இதுவரை ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்தாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

சமூக ஊடகத்தில் தவறாக அல்லது கேலி, கிண்டல் செய்து திமுக பற்றி அதன் கட்சி தலைவர்கள் பற்றி பதிவு செய்பவர்களை மிக தீவிரமாக ஆராய்ந்து அவர் மீது புகார் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் திமுகவினர் யாராவது ஆபாசமாக அல்லது அவதூறு செய்திகளை பரப்பினால் கண்டும் காணாமல் தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் வருவது போன்று நடந்து கொள்வர் எம்பி செந்தில்குமார்.

இந்நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் திமுக அரசை விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து கொந்தளித்த திமுக உடன் பிறப்பு ஒருவர் தனது டிவீட்டர் பக்கத்தில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பெயரை குறிப்பிட்டு, உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதேனும் எம்பி பதவிக்கு முன்பு இருந்திருந்தால், முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை இவ்வளவு பச்சையாக பேசும் சாட்டையை கைது செய்ய முடியாதா.? என கேள்வி எழுப்பியவர்.

மேலும் கழகத்துடன் நேரில் நேரடி தொடர்பில் இருப்பது ஏதேனும் மாமா வேலை பார்ப்பதற்காக தெளிவுபடுத்துங்கள் என கடுமையாக பதிவு செய்திருந்த திமுக உடன்பிறப்புக்கு, உங்களுக்கு இது சரியா வரவில்லை.,வேற எதாவுது முயற்சி பண்ணி பாருங்க என செந்தில்குமார் எம்பி பதிலளித்திருந்தார். அதற்கு அந்த உடன் பிறப்பு , அவ்வளவு வெறுப்பா இருக்கு… என்னதான் நடக்கிறது கட்சி மற்றும் ஆட்சியில், பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாம் ஒரு அளவுதான்..

நான் உங்களுக்கு எழுதும்போது அத்தனை உள்ளகிடக்கையையும் அடக்கித்தான் எழுதினேன். மணசு வலிக்குதுங்க…. மண்ணிப்பெல்லாம் கேட்க மாட்டேன் சாரி… நான் உபி, மேலும் அண்ணன் சகோதரன் தம்பி.. உடன்பிறப்புகளின் கடுமையான காட்டமான வேண்டுகோளுக்கிணங்க மிகவும் மனம் திறந்து மன்னிப்பு கேட்கிறேன்… அண்ணா அவன விட்ராதீங்ணா… ப்ளீஸ் மனசு வலிக்குதுங்ணா என தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் திமுக உடன் பிறப்பு ஒருவர்.