கமலுக்கு பதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்போது விக்ரம் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்பு என பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் அவர் அமெரிக்கா சென்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து மருத்துவமனையில் சோதனை செய்துகொண்டதில் தொற்று உறுதியானது.

இதையடுத்து இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது. அவர் மட்டும் இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சூர்யா ஆகியவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.