நாளை வெளியாகிறது தனுஷ் பட டிரைலர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
Follow on Google News

தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் நடித்துள்ள அத்ராங்கி ரே திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தனுஷ் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படமாக அத்ராங்கி ரே உருவாகியுள்ளது. பாலிவுட்டில் தனுஷை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் இந்த படத்தை இயக்க, அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியவர்கள் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகியுள்ள கொரோனா தாமதங்களால் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.