அண்ணாத்தே நெகடிவ் விமர்சனம் பின்னணி யார்.? எதற்காக இப்படி செய்தார்கள் தெரியுமா.? வெளியானது அதிர்ச்சி தகவல்…

0
Follow on Google News

நேற்று தீபாவளி அன்று அண்ணாத்த மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகிவிட்டது. ஆரம்ப காலம் முதல், எந்த வசூல் வேட்டை செய்த ரஜினி படம் எடுத்தாலும், அந்த படத்திற்கு விமர்சகர்களின் பார்வை கடுமையாக தான் இருந்து இருக்கிறது, அதற்கு காரணம், கிரிட்டிக்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் விமர்சகர்கள், தங்களை பொது ஜனத்தை விட அறிவார்ந்தவர்கள் என்று உலகிற்கு உணர்த்த , மக்களுக்கு நெருக்கமான கதையம்சம் கொண்ட ரஜினி படங்களை முடிந்த அளவு தூற்றியுள்ளனர். அண்ணாத்தையிலும் அவர்களின் அறிவு நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி விமர்சனங்களை வாரி இறைத்துள்ளனர்.

இந்த முறை விமர்சகர்களுடன் வேறு சிலரும் இணைந்து உள்ளனர், அவர்களில் சன் நெட்ஒர்க் விநியோக முறையால் பாதிக்கப்பட்டவர்கள்: நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கவேண்டும், நாம் என்ன கேட்க வேண்டும் என்று ஒரு கும்பல் எப்பொழுதும் முடிவு செய்யும். அதற்கு அவர்கள் பல influencerகளை பயன்படுத்துவார்கள். அதற்கு காரணம், ஒன்று அரசியலாக இருக்கலாம், அல்லது வியாபாரமாக இருக்கலாம்.

அண்ணாத்த படத்தில் சன் விநியோக வியாபாரத்தை வேறு எந்த நிறுவனத்திற்கும் (தமிழகத்திற்கு வெளியே, வெளி நாடுகளில் )கொடுக்காமல் , நேரடியாக செய்தது. இந்த யுக்தி வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் வரும் அணைத்து படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் இதை செய்வார்கள். ஆக, இப்படம் வெற்றியடைய கூடாது என்பதற்காக இம்முறைக்கு எதிரானவர்கள் இணையத்தில் படத்தை பற்றிய தவறான கருத்தை பரப்பி வருகின்றார்.

இவர்களுக்கு உதவும் வேலையே உலக சினிமா விமர்சகர்கள் சிறப்பாக செய்கின்றனர். இதற்கு முன் சில குடும்ப கதை திரைப்படம் வெளி வரும் பொழுது இந்த விமர்சகர்களின் விமர்சனத்திற்கும் அண்ணாத்த படத்திற்கு அவர்கள் கொடுக்கும் விமர்சனத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆராய்ந்தால் இது நன்றாக புரியும். இவர்களும் படம் வெளிவருவதற்கு முன்னரே படத்தை மட்டம் செய்யும் வேலையே தொடங்கி விட்டனர்.

ஆரம்ப காலம் முதல், எந்த வசூல் வேட்டை செய்த ரஜினி படம் எடுத்தாலும், அந்த படத்திற்கு விமர்சகர்களின் பார்வை கடுமையாக தான் இருந்து இருக்கிறது, அனால் அப்படி விமர்சிக்க பட்ட படங்கள் அனைத்தும் வரலாறு படைத்தது இருக்கிறது. இதோ அண்ணாத்த படமும், முதல் நாள் வசூலில், புதிய சாதனையை படைத்தது விட்டது, இது மேலும் பல சாதனைகளை படைக்க போகிறது. காரணம், படத்தின் Targeted audience ரசிகர்கள் குடும்பங்கள் மற்றும் பெண்கள். அவர்களை படம் கவர்ந்துள்ளது.

படத்தில் சில காட்சிகளில் ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியில் அழுவதை பார்க்க முடிகிறது. மேலும் பிள்ளைகள் வளர்ப்பில் கண்டிப்பு மட்டும் இல்லாமல் நட்பாக அனைத்தையும் பகிரும் எண்ணத்தை சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவும் கொண்ட படம் ரசிகர்களை கவர வில்லை என திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்தாலும், , தமிழகத்தின் குடும்பங்களை கவர்ந்து வருகிறது. திரையரங்கில் மக்கள் ஆனந்த கூத்தாடுவதை இந்த படத்தை தவிர வேறு எங்கும் பார்த்து விட முடியாது.– வின்ஸ்டன் ராஜ்

பயங்கரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியில் வெற்றிமாறன்…