அண்ணாத்தே திரையரங்கில் அலைமோதும் பெண்கள் கூட்டம்..! மூக்குடைபட்ட போலி விமர்சகர்கள்.! இது தான் எதார்த்தம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் திரைக்கு வந்தது அண்ணாத்தே திரைப்படம். இயக்குனர் சிவா இயக்கத்தில், சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் சிவா இவர் இயக்கத்தில் வெளியான ஐந்து படங்களில் நான்கு படங்கள் அஜித் குமார் நடித்த படம், இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் தவிர்த்து மற்ற படங்கள் படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும்.

இந்நிலையில் சிவா மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான அண்ணாத்தே திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்த நிலையில், படம் வெளியான தீபாவளி அன்று, திரைப்பட விமர்சகராக தங்களை அடையாளப்படுத்தி கொண்டு மொக்க படங்களை அகோ… ஓகோ..என்று பாராட்டுவது, மக்கள் பார்க்க கூடிய படங்களை மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பதிவு செய்து அந்த படத்தை தோல்வி அடைய வைக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வெளியான அண்ணாத்தே திரைப்படத்துக்கு எதிர்மறையாக பலர் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர், அந்த வகையில் பிரசாந்த் ரங்கசாமி, ப்ளூ சட்டை மாறன் போன்ற பிரபல சினிமா விமர்சகர் மற்றும் சிலர் அண்ணாத்தே படம் குறித்து எதிர்மறையாக விமர்சனகள் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று படம் வெளியான இரண்டாவது நாள் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது, குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அண்ணாத்தே திரைப்படம்.

கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக, வசதிமிக்க நபராக இருக்கிறார் ரஜினிகாந்த், அண்ணன் தங்கை பாசம் கதையின் கருவாக அமைந்துள்ளது, குஷ்பு, மீனா இடம்பெறும் காட்சிகள் படத்தை கமெர்ஷியலாக செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவையுடன் நகர்கிறது, முதல் பாகம் கிராமத்தில் இரண்டாவது பாகம் கொல்கத்தா நகரிலும் ரஜினிகாந்த் ஏற்ப ஸ்டைல், வசனம் மாஸ் சண்டை காட்சிகள் என இயக்குனர் சிவா தூள் கிளப்பியுள்ளார் என்றே சொல்லலாம்.

செண்டிமெண்ட் காட்சிகளில் திரையரங்கில் அமர்த்திருப்பவர்கள் கண்களில் கண்ணீர் வருவதை காண முடிகிறது. படம் முடிந்த பின்பு சில நிமிடம் திரையரங்கில் அமர்ந்து கண்ணீரை துடைத்த பின்பு ஆடியன்ஸ் வெளியில் வருவதை காண முடிகிறது. இதுகுறித்து படம் பார்த்தவர்கள் கூறுகையில், பல வருடங்களுக்கு பின்பு குடும்பத்துடன் பார்த்து கொண்டாடினோம், சில போலி விமர்சகர்கள் அண்ணாத்தே படம் குறித்து வெளியிட்ட எதிர்மறை விமர்சனத்தால் பார்ப்போமா, வேண்டாமா என குழப்பத்தில் இருந்தோம்.

ஆனால் படம் பார்த்தவர்கள் நல்லா இருக்கும், குடும்பத்துடன் பார்க்கலாம் என்று சொன்னார்கள், படம் பார்த்தோம் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார், இந்நிலையில் அண்ணாத்தே திரைப்படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவது போலி திரைப்படம் விமர்சகர்கள் முகத்தில் கறியை பூசியது போன்று அமைந்துள்ளது , இனி வரும் காலங்களில் போலி திரைப்பட விமர்சகர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ளதால், மேலும் அண்ணாதே படத்துக்கு வழங்கியுள்ள மக்களின் தீர்ப்பால் போலி விமர்சகர்கள் மூக்குடைபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

பயங்கரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் முயற்சியில் வெற்றிமாறன்…