உண்மையை பேச திராணி வேண்டும்…! வன்னிய சமூகத்தை வம்பிழுத்த விவகாரம்.! நடிகர் சூர்யாவுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, ஜெய்பீம் படத்தின் கதை பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை சம்பத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் குருமூர்த்தி என்கிற பெயரில் வரும் காவல்த்துறை அதிகாரியை சில குறியீடுகளை வைத்து அவரை வன்னியர் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் மத்தியில் நடிகர் சூர்யாவுக்கு கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.

ஜெய்பீம் படத்தில் வரும் குருமூர்த்தி என்கிற பெயரில் வரும் காவல்துறை கதாபாத்திரம், உண்மை சம்பவத்தில் அந்த போலீசார் பெயர் அந்தோனிசாமி, அவர் தலித் சமூகத்தை சேர்ந்த கிறிஸ்துவர், ஆனால் மற்ற கதாபாத்திரத்துக்கு உண்மையான பெயர்களை குறிப்பிட்டு, அந்தோனிசாமி கதாபாத்திரத்துக்கு மட்டும் குருமூர்த்தி என பெயரிட்டு வன்னியர் சமூகத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் வம்பிக்கிழுத்தது குறித்து ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்ததாவது.

பாதிக்கப்பட்ட ராஜாக்கன்னு என்ற குரவர் சமூகத்தை சார்ந்த மனிதருக்காக களத்தில் போராடி திருமணம் கூட செய்யாமல் உடன் நின்றவர் வன்னியர் இனத்தை சேர்ந்தவர்.. மேலும் உடன் நின்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஐயா வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.. ஆனால் திரைப்படத்தில் கொலை செய்த அந்தோனிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி வன்னியர் சமூக அடையாளம் கொண்டு காட்டியதில் உள்ளது உள்நோக்க அரசியல்..

ஜெய்பீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்னவர்கள் அதை பின்பற்றவும் வேண்டும்.. அவர் சாதியை சொல்வது என் நோக்கம் இல்ல சகோ.. உண்மையை சொல்றேன்னு இப்படி வன்மத்தை கொட்டி வச்சதால இதை பேச வேண்டிய நிர்பந்தம்.. அந்தோனிசாமி ஏன் குருமூர்த்தியாக குறிப்பிட்ட சமூகத்தவராக காட்ட வேண்டும்.. பதில் இருக்கா… உண்மையை திரையில் பேச திராணி வேண்டும்..என நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினரை வெளுத்து வாங்கியுள்ளார் மோகன் ஜி.

மோகன் ஜி இந்த பதிலடிக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், படம் எடுப்பவர் உண்மை சம்பவம் என சொல்லிவிட்டு, சம்பவத்தை மட்டுமே படமாக்க வேண்டும், அதை செய்யாமல் காவலரின் சாதியைசொல்ல வேண்டிய அவசியமில்லை, சொல்ல நினைத்தால் உண்மையை சொல்ல வேண்டும்,நீதிக்கு போராடிய வன்னியர்கள் இருட்டடிப்பும்,தப்பு செய்த காவலரை வன்னியர் என தப்பாக சித்தரிக்கலாமா?மோகன் ஜி சத்ரியர்,நியாயம் கேட்டால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தகூடாது.அது மனித பண்பாடு கிடையாது என தெரிவித்துள்ளார்.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?