விஷாலின் வீரமே வாகைசூடும் ரிலிஸ் தேதி அறிவிப்பு!

0
Follow on Google News

நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த படமாக வீரமே வாகை சூடும் படம் ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.
விஷால் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான எனிமி திரைப்படம் அண்ணாத்த படத்தோடு போட்டி போட்டு களம் கண்டது. அதனால் போதுமான திரைகள் கிடைக்கவில்லை. அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் எனிமி படமும் சூப்பராக இல்லாததால் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் அவரின் அடுத்த படமான வீரமே வாகை சூடும் ரிலீஸில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளிக்கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. ஆனால் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் இரண்டு வாரம் கழித்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்துக்கு வெளியாக உள்ளது. அதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படமும் வெளியாகிறது.