என் ஓடும் நாட்கள் முடிந்து விட்டன்… உலகின் அதிவேக பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

0

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் மூட்டு மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ஷோயிப் அக்தர். உலகக் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் வீசிய 163.1 கிமீ வேக சாதனையை இன்னும் யாரும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவிட்ட அவர் இப்போது தன்னுடைய முழங்கால் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். ஏற்கனவே அதற்காக அறுவை சிகிச்சை பெற்று வந்த இப்போது முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விரைவில் இந்த சிகிச்சை நடக்க உள்ளது. இது சம்மந்தமாக டிவிட்டரில் அவர் ‘என்னுடைய ஓடும் நாட்கள் முடிந்துவிட்டன’ என தெரிவிக்க, ரசிகர்கள் பலரும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.