சோதனை மேல் சோதனை…. ஒரு வழியாக மாமனிதனுக்கு வந்த விடிவுகாலம்!

0
Follow on Google News

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலிஸ் ஆகாமல் உள்ளது. சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து நான்காவது படமாக மாமனிதன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இளையராஜாவும் முதல் முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரித்திருந்தார்.

மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பலதரப்பட்ட பிரச்சனைகளால் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இதற்கிடையில் படத்தின் வர்த்தகம் சம்மந்தமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்பட்டது. மேலும் சீனு ராமசாமிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்றே கேள்வி எழுந்தது. இப்போது கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் தேவை என்ற நிலையில் இருக்கிறார் விஜய் சேதுபதியும். இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவாய் மாமனிதன் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொட காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்ஸார் போகிறது’ எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!