இந்தியா vs பாகிஸ்தான் தொடர்… என் கையில் இல்லை – கைவிரித்த கங்குலி!

0
Follow on Google News

கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட இரு நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன.கிரிக்கெட்டை ஒரு மதம் போல தீவிரமாக பின்பற்றும் இரு நாடுகள் என்றால் அது இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இந்த இரு நாடுகளிலும் மற்ற விளையாட்டுகளும் விளையாட்டு வீரர்களும் கவனம் பெறாததற்கு கிரிக்கெட் மீது பாய்ச்சப்படும் அதீத வெளிச்சம்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியை தொலைக்காட்சி, இணையம் மற்றும் மைதானத்தில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கைய விட சூப்பர் 12 ல் இந்தியா பாகிஸ்தான் போட்டியைதான் அதிக ரசிகர்கள் பார்த்தார்கள் என்பதே அதற்கு சான்று.

இருநாட்டு அரசியல் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் கலந்துகொள்கின்றன. தனியாக இருநாட்டுத் தொடர் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இரு நாட்டு தொடரில் இரண்டு அணிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கான அரசியல் சூழல் இப்போது இருப்பதாக தெரியவில்லை.

இரு நாட்டுத் தொடர் குறித்து பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி அளித்துள்ள பதில் அதை உறுதிப் படுத்துகிறது. இது சம்மனதமாக அவர் ‘ இரு அணிகளும் இப்போது ஐசிசி தொடர்களில் விளையாடுகின்றன. இரு நாட்டு தொடர் நடக்க வாய்ப்பில்லை. அதை இரு நாட்டு அரசுகள்தான் முடிவு செய்யமுடியும். நானோ ரமீஸ் ராஜாவோ (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்) முடிவு செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளார்.