வாத்தி படம் எப்படி இருக்கு … இது தாங்க கதை.. படத்தின் முழு விமர்சனம்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ்,சமுத்திரக்கனி, பாரதிராஜா, நடிகை சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் வாத்தி. நீண்ட இடைவேளைக்குப் பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும், அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது.

அதனால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள, மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் வாத்தி படம் எப்படி இருக்கு என்பதை தான் பார்க்க போகிறோம்.

ஒரு டிரைவர் மகன் தனுஷ் வாத்தியாராக உள்ளார். பாசமான தந்தை மகனாக தனுஷ் அவருடைய தந்தை.தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிக்கு இடையில் நடக்கும் கதை, கல்வியை வியாபாரம் ஆக்கப்படுவது குறித்த கதை. இதுவரை நடிகர் சமுத்திரக்கனியை ஒரு குணசித்திர நடிகராக மட்டுமே தமிழ் சினிமாவில் பார்த்து வந்த நிலையில், வாத்தி படத்தில் ஒரு கொடூரமான வில்லன் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பள்ளிகளில் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. அரசு பள்ளிகளை விட தனியார்பள்ளிகள் சிறந்து விளங்கி வருவதால், தனியார் பள்ளியில் இருக்கும் சில வாத்தியார்களை அரசு பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு ஆணை வருகிறது. அதற்கு தனியார் பள்ளிக்கூடத்தின் கூட்டமைப்பு சங்க தலைவர் சமுத்திரக்கனி ஒப்புக்கொள்கிறார். இதை அறிந்த தனியார் பள்ளிக்கூடத்தின் முதலாளிகள் எதிர்ப்பு தெரிவிக்க.

அதற்கு சமுத்திரக்கனி நாம் பள்ளிகளில் இருக்கும் திறமையான ஆசிரியர்கள் யாரையும் அரசு பள்ளிக்கு அனுப்பவில்லை, மொக்கையான ஆசிரியர்களை தான் அனுப்ப இருக்கிறோம் என்று சொல்லி சமாதானம் செய்கிறார். அந்த வகையில் தனியார் பள்ளியில் இருக்கும் பல ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு பணி அமர்த்தப்படுகிறார்கள். அந்த வரிசையில் தனுஷ் அரசு பள்ளிக்கு செல்கிறார்.

படிப்பறிவு பற்றி விழிப்புணர்வே இல்லாத ஒரு கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிக்கு வாத்தியாராக தனுஷ் செல்கிறார். அங்கே மக்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்து மாணவர்களை பள்ளியில் படிக்க வைக்கிறார், ஒரு வருடத்தில் கடுமையான போராட்டத்திற்கு பின்பு அந்த அரசு பள்ளி மாணவரை தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாக கொண்டு வருவேன் என்று சபதம் ஏற்ற வாத்தியார் தனுஷ் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி வெற்றியும் அடைகிறார்.

மேலும் தனுஷ் பாடம் சொல்லி கொடுத்த அரசு அப்பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்று பெறுகிறார்கள். இதன்பு தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி இருவருக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை அடைகிறது. அதன் பின்பு தனுசுக்கு பல கட்டங்களில் இடையூறுகளை ஏற்படுத்துகிறார் சமுத்திரக்கனி. ஆனால் தனக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளையும் கடந்து தான் சாதனை படைக்கிறார் வாத்தியார் தனுஷ்.

பொதுவாக கமர்சியல் படங்களில் சண்டை, அடிதடி, கவர்ச்சி என இதற்கெல்லாம் இடம் தராமல் ஒரு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படைப்பு என்று சொல்லும் அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம் தான் வாத்தி. பாரதிராஜா ஒரே ஒரு சீனுக்கு வந்தாலும், அந்த சீனை பார்க்கின்றவர்கள் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாரதிராஜா.

மொத்தத்தில் சமூக அக்கறை கொண்ட வாத்தி அனைவரும் பார்த்து கொண்டாட கூடிய படம், கல்விக்கு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு படம் என்கின்ற நல்ல விமர்சனத்துடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி.