மத்திய அமைச்சராகிறார் நடிகை குஷ்பு.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. செம்ம குஷியில் குஷ்பு..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பூவுக்கு தமிழகத்தில் கோவில் கட்டி கொண்டாடும் வகையில் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகை குஷ்பு. பெரும்பாலும் கிராமம் சார்த்த கதை, குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் நடித்ததால், பொதுவாக தமிழக பெண்கள் மத்தியில் செல்வாக்கும் மிக்கவரான நடிகை குஷ்புவு, தன்னுடைய அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கினார்.

2006 முதல் 2011 வரை கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது திமுகவில் நடிகை குஷ்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திமுகவில் நிலவிய உள் கட்சி அரசியலால் தானாகவே அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் நடிகை குஷ்பு, அதன் பின்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேசிய அளவில் முக்கிய பதவி கொடுத்து குஷ்புவிற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும் கூட தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி அரசியலில் காரணமாக அவர் அங்கே தாக்கு பிடிக்க முடியவில்லை.

பின்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு தகுந்த அங்கீகாரத்தை கொடுத்த பாஜக, அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது, ஆனால் குஸ்பு தேர்தலுக்கு முன்பு சுமார் 6 மாதம் சேப்பாக்கம் தொகுதியை குறி வைத்து தேர்தல் பணியாற்றினார், சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்கிற கருத்து கணிப்பு கூட வெளியானது.

ஆனால், கடைசி நேரத்தில் சேப்பாக்கம் தொகுதி கிடடைக்காமல், ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவுக்கு கிடைத்தது, இருந்தும் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார் குஷ்பு. சமீப காலமாக நடிகை குஷ்பு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், குறிப்பாக தெலுங்கு தொலைக்காட்சி தொடர் மற்றும், தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் ரெம்ப பிசியாக இருக்கிறார் குஷ்பு.

மேலும் தெலுங்கு மக்களிடம் குஷ்புவுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், நடிகை குஸ்பு பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் அவர் நடிக்கும் சீரியலில் TRP ரேட்டிங் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு மக்கள் மத்தியில் குஷ்புவிற்கு இருக்கும் வரவேற்பை அறிந்த பாஜக தேசிய தலைமை குஷ்புவிற்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் குஷ்புவுக்கு அரசியல் திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளது. அதில் ஆந்திரா அரசியலில் குஷ்பு கவனம் செலுத்த உத்தரவு போட்டுள்ள பாஜக தேசிய தலைமை.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் பாஜக சார்பில் போட்டியிட்டு குஷ்பு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் இடம் உறுதி என்கிற உத்தரவாதத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆந்திராவில் புதியதாக பங்களா வீடு ஓன்று வாங்கியுள்ள நடிகை குஷ்பு, அங்கே தான் பெரும்பாலும் வசித்து வருகிறார். தற்பொழுது மத்திய அமைச்சராக இருக்கும் இந்தி நடிகை ஸ்மிரிதி இராணி போன்று பாஜகவில் தேசிய அளவில் ஒரு ரவுண்டு வருவதற்கான வாய்ப்பு குஷ்புவுக்கு பிரகாசமாக இருக்கிறது.

அதே போன்று நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் முக்கிய நபராக வலம் வருவது போன்று நடிகை குஷ்புவுக்கு ஆந்திர மக்கள் சினிமாவில் கொடுத்த அதே வரவேற்பு அரசியலிலும் தருவார்கள் என்கிற நம்பிக்கை குஷ்பு மற்றும் தேசிய பாஜக தலைமைக்கு உள்ளது, அந்த வகையில் வரும் மே மாதம் தொடங்கி, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை ஆந்திராவில் மிக தீவிரமாக நடிகை குஷ்பு முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.