தேதி குறித்த கடன்காரர்கள்… கடனை அடைக்க சிவகார்த்திகேயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இவர்களுக்கு இடையில் ஆரம்ப கட்டத்தில் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்துள்ளது. தற்பொழுது அதிக படங்களில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியிடம், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் வில்லனாக நடிக்க அணுகியுள்ளனர் பட குழுவினர். படத்தின் கதையை கேட்டு எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஒரு வேலை அதிகம் சம்பளம் கொடுத்தால் விஜய் சேதுபதி ஓகே சொல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மிக பெரிய கடன் பிரச்சனையிலும் சிவகார்த்திகேயன் தற்பொழுது தப்பிக்க முடியாத சூழலில் சிக்கி தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் நண்பன் RD ராஜன் உடன் பல படங்கள் இணைந்து தயாரித்தார். அதில் சுமார் 100 வரை கோடி கடன் ஏற்பட்டது. இந்த மொத்த கடனையும் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டார்.

கடன் பெற்றவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில். தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ்ன் போது சுமார் 25 கோடி ரூபாய் விதம் நான்கு தவணையில் 100 கோடி ரூபாய் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வெளியான போது முதல் தவணையாக 25 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பின்பு அவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் பட ரிலீஸ்ன் போது, ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் செய்த ஒப்பந்தம் படி நடந்து கொள்ளவில்லை சிவகார்த்திகேயன் என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு, சிவகார்த்திகேயனிடம் இந்த வருடத்துக்குள் பாக்கி இருக்கும் மூன்று தவணை பணம் 75 கோடியை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வருடத்திற்குள் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்புகள் இல்லை, அவர் கைவசம் இரண்டு படங்கள் தான் உள்ளது. ஒன்று மாவீரன் மற்றொன்று அயலாம், இதில் அயலான் படம் தயாரிப்பாளர் கே ஜி ஆர் ராஜேஷ், இவர் டாக்டர் படத்தின் பஸ்ட் காப்பி எடுத்து கொடுக்க 55 கோடி ரூபாய் சிவகார்த்திகேயனிடம் பேசி கடைசி கட்டத்தில் 10 கோடி ரூபாய் குறைத்து தற்பொழுது பண கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கே ஜி ஆர் ராஜேஷ் வாங்கிய 27 கோடி ரூபாய் கடன் பிரச்சனையால் டாக்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கே.ஜி.ஆர் ராஜேஷ் வாங்கிய 27 கோடி ரூபாய் கடனை ஏற்று கொண்டு சிவகார்த்திகேயன் கையெழுத்திட்ட பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் வெளியான பின்பு சிவகார்த்திகேயன் ஏற்று கொண்ட கடன் தொகையை கே.ஜி.ஆர்.ராஜேஷ் திரும்ப தரவில்லை.

இந்நிலையில் டாக்டர் படத்தின் பாக்கி தொகை 10 கோடி ரூபாய், மற்றும் ஏற்று கொண்ட கடன் தொகை 27 கோடி ஆக மொத்தம் 37 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான், அயலான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சிவகார்த்திகேயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், அயலான் படம் நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்று சிவகார்த்திகேயன் கடன் தொல்லையில் ஒரு பக்கம் சிக்கி தவிக்க மறுபக்கம் அவருடைய படங்களும் பல்வேறு பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

ஒரே ஒரு நோட்டீஸ்..மொத்த இமேஜும் டேமேஜ்… அந்தர் பல்டி அடித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..!