அந்த விஷயத்துக்கு அனுமதிக்காத ஐஸ்வர்யா… சோகத்தில் முடிந்த தனுஷ் பிறந்தநாள்… எந்த விஷயம் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த 2022 ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் தங்களுடைய 17 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, இருவரும் ஒருமனதாக பிரிவதாக அதிரடியாக அறிவித்து தற்பொழுது வரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்குப் பின்பு குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இவர்களை இணைத்து வைக்க இரண்டு குடும்பத்தினர் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது.

பிரிந்த இந்த தம்பதியினர்க்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். பிரிந்த பின்பு சினிமாவில் இருவரும் பிசியானார்கள். இரண்டு மகன்களும் தற்பொழுது வரை தாய் ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். பிரிவுக்கு பின்பு படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஐஸ்வர்யாவிடம் இருக்கும் தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்து வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்தார் தனுஷ்.

அப்படி அவர் மகன்களுடன் ஊட்டியில் மகிழ்ச்சியாக இருந்தது, இளையராஜா இசை நிகழ்ச்சியில் மகனுடன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இரண்டு குழந்தைகளும் தாய் ஐஸ்வர்யாவை விட தந்தை தனுஷ் மீது தான் அதிகம் பாசமாக இருப்பதாகவும், ஐஸ்வர்யா பெரும்பாலும் அவருடைய இரண்டு குழந்தைகளை கண்டு கொள்வதே இல்லை என ஐஸ்வர்யாவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து வாரம் ஒரு முறை ஐஸ்வர்யாவும் தன்னுடைய மகன்களுடன் சந்தோஷமாக ஜாலியாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, மகன்கள் இருவரும் தன்மீது அதிக பாசமாக இருக்கிறார் என்பதை காட்டிக் கொண்டார், மேலும் தனுஷ் உடன் இரண்டு மகன்களை வெளியில் அனுப்பினால் அது தனக்கு எதிராக அமைந்து விடுகிறது என தனுஷ் உடன் தன்னுடைய இரண்டு மகன்களை வெளியில் அனுப்ப அனுமதிப்பது இல்லை ஐஸ்வர்யா என கூறப்படுகிறது.

அப்படி அனுப்பினாலும் கூட இரண்டு மகன்களுடன் தனுஷ் புகைப்படம் எடுக்கக் கூடாது என்கின்ற கண்டிஷனுடன் இரண்டு குழந்தைகளையும் தனுஷ் உடன் அனுப்புகிறார். இந்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து பின்பு முதல் முதலாக, ஜூலை 27 அன்று தன்னுடைய 39 வது பிறந்த நாளை கொண்டாடும் தனுஷ், பிறந்தநாள் அன்று தன்னுடைய இரண்டு மகன்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் தனுஷ், ஆனால் மகன்களை தனுஷ் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அனுப்பினால், தன்னை விட தந்தையிடம் அதிக பாசமாக இருப்பார்கள், மேலும் இவர்கள் தந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வெளியானால் அது தனக்கு எதிராக அமைந்து விடும் என்பதால், தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தன்னுடைய இரண்டு மகன்களையும் அனுப்பவில்லை ஐஸ்வர்யா என கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய பிறந்தநாளில் சோகத்துடன் தனுஷ் இருந்ததாக கூறப்படுகிறது.

லெஜெண்ட் சரவணன் திமிர் பேச்சு… அமிதாப்பச்சன், ரஜினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?