ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!

0
Follow on Google News

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி உள்ள படம் லெஜன்ட். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் சுகர் மாத்திரை தயாரிப்பது தான் இந்த படத்தின் மய்ய கதை.

இந்த படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு மேக்கப் செய்தவர்கள், வாகனத்திற்கு வார்னிஷ் பெயிண்ட் அடிப்பது போன்று அவருடைய முகத்தை பட்டி டிகிரி செய்து மேக்கப் செய்துள்ளனர். அவர் வாயே திறக்காத படி வாய் உள்ளேயும் மேக்கப் செய்துள்ளதை காண முடிகிறது. இதனால் ஒரு அளவுக்கு மேல் வாயைத் திறந்து அவரால் நடிக்க முடியவில்லை.

தன்னுடைய கடை விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த லெஜெண்ட் சரவணன் சினிமா ஆசையை அறிந்து கொண்ட அவரின் விளம்பர பட இயக்குனர்களான ஜெரி மற்றும் ஜேடி ஆகியோர், நீங்கள் ஏன் படத்தின் நடிக்க கூடாது என ஆசை காட்டி , சினிமா இயக்குனராக வேண்டும் என்கின்ற அவர்களின் கனவை லெஜெண்ட் சரவணன் மூலம் நிறைவேற்றி கொண்டுள்ளார்கள்.

இந்த படத்தில் லெஜெண்ட் சரவணனுக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை, சோகக்காட்சிகள், காதல் காட்சிகள், கோபம் படக்கூடிய காட்சிகள் என அனைத்திலும் ஒரே மாதிரியாக, ஒரு ரோபோவுக்கு வார்னிஷ் பெயிண்ட் அடித்து நிக்க வைத்தது போன்று ஒரே பாவனையில் தான் லெஜெண்ட் சரவணா நடித்துள்ளார். பெரும் பொருள் செலவிலான இந்த படம் எப்படி இருக்கின்றது என்று ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்,

பட்டுத்துணியில் செய்யப்பட்ட ஜட்டி போன்று உள்ளது என்று விமர்சனம் சினிமா விமர்சகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். லெஜெண்ட் சரவணன் உண்மையிலே சினிமாவை நேசிக்கக் கூடியவராக இருந்தால் அவருக்கு வராத நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு, நல்ல கதைகளை தேர்வு செய்து, திறமையாக நடிக்க கூடிய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அந்த படத்தை தயாரிக்கலாம்.

அதைவிட்டு விட்டு இவரை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என்று திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு அந்த படத்தில் வேலை செய்தவர்கள் இவரை கோமாளியாக்கம் முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்த படத்தில் பணியாற்றியவர்கள் இவரால் பலன் அடைந்திருக்கிறார்கள், மேலும் இவர் படத்தில் வேலை செய்தவர்களுக்கு பல மடங்கு சம்பளம் அதிகரித்து அள்ளி கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.

தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கிய தொழிலதிபதிகளில் ஒருவர் லெஜெண்ட் சரவணன், ஹீரோவாக நடிக்கிறேன் என்று அவருடைய மரியாதையை அவரே இழந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் உணர வேண்டும். இந்த படத்திற்கு சுமார் 50 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லெஜெண்ட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசைக்காக இந்த 50 கோடியை வீணடித்துள்ளார் சரவணன்.

இன்று சரவணன் மிக பெரிய கோடீஸ்வரராக இருக்க காரணமாக இருக்கும், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கால் எடுக்க நின்று உட்கார கூட முடியமால் இவர் சொகுசாக வாழ்வதற்கு அவர்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 50 கோடியை வீணடித்துள்ள லெஜெண்ட் சரவணன், இவரிடம் இருக்கும் பணத்தில் வெறும் 5 கோடியை மட்டும் பிரித்து தலா ஒருவருக்கு 5 ஆயிரம் கொடுத்தலே அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைவார்கள்.

அதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற இவரது விருப்பத்தை, சிலர் அவர்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்தி, லெஜெண்ட் சரவணன் அவர்களை திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு கோமாளியாகப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை லெஜெண்ட் சரவணன் உணர வேண்டும் என்கின்றனர் அவர் மேல் அக்கறை கொண்ட அவரது நலம் விரும்பிகள்.

ஒரே ஒரு நோட்டீஸ்..மொத்த இமேஜும் டேமேஜ்… அந்தர் பல்டி அடித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..!