பார்த்திபன் வாங்கிய டுபாக்கூர் விருது… என்னப்பா இது.? பரபரப்பை கிளப்பிய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் இரவின் நிழல். இந்த படம் முதல் சிங்கிள் ஷாட் படம் என்று விளம்பரம் செய்து வந்த நிலையில். இது முற்றிலும் பொய், இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு விஷன் கேட் என்கின்ற சிங்கிள் ஷாட் படம் முன்பே வந்துவிட்டது, அதனால் 12 கோடி தமிழர்களை பார்த்திபன் ஏமாற்றிவிட்டார். அதனால் தமிழர்களிடம் பார்த்திபன் மன்னிப்பு கேட்க வேண்டும் என படம் வெளியான போது ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார்.

இது பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இருவருக்கும் இடையில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து பார்த்திபன் விளக்கம் கொடுத்து வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பார்த்திபன் குறித்து மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் தெரிவித்ததாவது,ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசி அதை உண்மையாக்கும் வேலையை செய்து வருகிறார் பார்த்திபன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பார்த்திபன், அங்கே ஒருவரிடம் உலகத்திலேயே இரவின் நிழல் படம் தான் முதல் சிங்கிள் ஸ்டார்ட் படம் என்று பேச வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி அன்று மதியம் நடைபெறுவதாக இருந்தது, ஆனால் மாலை லத்தி படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெறுவதால் பத்திரிகையாளர்கள் அனைவரும் அங்கே சென்று விடுவார்கள்.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால், பத்திரிகையாளர்கள் பெருமளவில் பங்கேற்று ப்ளூ சட்டை மாறன் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்கு கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே தான், இந்த நிகழ்ச்சியை மாற்றி அமைத்துள்ளார் பார்த்திபன் என தெரிவித்த ப்ளூ சட்டை மாறன். மேலும் லிங்க் அண்ட் புக் ஆஃப் ரெகார்ட் என்கின்ற நிறுவனத்தில் இருந்து இயக்குனர் பார்த்திபனுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது

உலகத்தில் முதல் சிங்கிள் ஷாட் பிலிம் என்பதற்காக இரவின் நிழல் படத்திற்காக இந்த விருது பார்த்திபனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருது கொடுத்த நிறுவனம் பற்றி, இது பிரபல வெளிநாட்டு நிறுவனமா.? என்கின்ற எதிர்பார்ப்பில் தான் தேடியதாக கூறிய ப்ளூ சட்டை மாறன். கடைசியில் குரோம்பேட்டை சேர்ந்தவர் தான் இந்த விருதை பார்த்திபனுக்கு கொடுத்துள்ளார் என தெரிவித்தவர்.

மேலும், என்னப்பா இது.? ஆஸ்கார் என்கிறீர்கள்.? கேன்ஸ் என்றீர்கள்.? கின்னஸ் என்றீர்கள்.? கடைசியில் பார்த்தால் குரோம்பேட்டை, சிங்காரப்பேட்டை லெவலுக்கு இறங்கி உள்ளீர்கள், இப்படி எல்லாம் நீங்கள் இறங்குவீர்கள் என்று தெரிந்திருந்தால், உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை நாங்கள் கேட்டிருக்க மாட்டோம் என நடிகர் பார்த்திபனை கிண்டல் கேலி செய்து பேசியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

சினிமாவை விட்டு போகும் சூரி… யோகிபாபு வைத்த ஆப்பு… சூரியின் பேராசையால் என்ன நடந்தது தெரியுமா.?