பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயில்வான் – ரேகா நாயர்… பயில்வனுக்கு மட்டும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 1 மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்ற போட்டியாளர்கள் ஓவியா, சினேகன், காயத்ரி ரகுராம், ஜூலி, ஆரத்தி, சினேகன், நமீதா, பரணி போன்ற போட்டியாளர்கள் அனைவரும் இது முதல் சீசன் என்பதால் அவர்களின் ரியாலிட்டியை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்ற போட்டியாளர்களிடன் உண்மை தன்மை வெளிப்பட்டதின் காரணமாக, பிக் பாஸ் வீட்டில் எப்போதும் ஒரு பரபரப்பு இருந்தது, இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு இந்த சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் சமூக ஊடகத்தில் ஆர்மி உருவாக்கி ஆதரவு தரும் அளவுக்கு பிக் பாஸ் சீசன் 1ல் ரியாலிட்டி இருந்தது.

ஆனால் அடுத்தடுத்து ஒளிபரப்பான பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் ரியாலிட்டி இல்லை, அவர்கள் முதல் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதை வைத்து, தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடிப்பு தன்மையை வெளிப்படுத்தினர். இதனால் அடுத்தடுத்து முதல் சீசன் போன்று மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் எதிர்பார்த்த TRP ரேட்டிங்கை கொடுக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் கமல்ஹாசன், ஆனால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக சீசன் 5ல் இருந்து தாற்காலியமாக விலகிய கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் பயில்வான் ரங்கநாதனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அதற்காக ஒரு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பயில்வான் ரங்கநாதன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோன்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் உடன் நடுரோட்டில் சண்டையிட்ட இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரிடமும் பிக் பாஸ் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து கமலஹாசனை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகின்றவர் ரங்கநாதன், கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் பங்கேற்பது, மற்றும் அவருடன் சமீபத்தில் சண்டையிட்ட ரேகா நாயரும் கலந்து கொண்டால், பிக் பாஸ் முதல் சீசனை விட வர இருக்கும் சீசன் 6 மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!