வேட்டையனாக ராகவ லாரன்ஸ் … மிக பெரிய வருத்தத்தில் ரஜினிகாந்த்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய சரிவை கொடுத்த படம் பாபா. இந்த படம் தோல்விக்கு பின்பு ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என பலர் மகிழ்ச்சியில் இருக்க. நான் யானை அல்ல, குதிரை, விழுந்தவுடன் எந்திரித்து ஓடுவேன் என்று அடுத்து சந்திரமுகி படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்து தன்னுடைய இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ரஜினிகாந்த்.

சில நிமிடங்களே சந்திரமுகி படத்தில் வரும் அந்த வேட்டையன் கதாபாத்திரம் பெரும் அளவில் அப்போது பேசப்பட்டது. சந்திரமுகி 2 படத்தை மீண்டும் இயக்க தொடங்கிய இயக்குனர் பி வாசு அப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திடம் கால் சீட் கேட்டு மிக நீண்ட நாட்கள் காத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிசியானதால் இயக்குனர் பி வாசுவுக்கு அவரால் கால் சீட் கொடுக்க முடியவில்லை.

இதனால் சந்திரமுகி 2 படத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, ஹிந்தியில் ஒரு புதிய படம் இயக்குவதற்கான வேலையில் இறங்கிய பி. வாசு, இந்தி படத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கா ராணவத்தை நேரில் சந்தித்து ஹிந்தி படத்தின் கதையை தெரிவித்துள்ளார். அப்போது கங்கானா தமிழில் இப்ப நீங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பி.வாசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரமுகி 2 படத்திற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கங்கனாவிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை தெரிவித்துள்ளார் இயக்குனர் பி வாசு. கதையைக் கேட்ட கங்கானா, அந்த ஹிந்தி படத்தை ஒரு ஓரமாக வைத்து விடுங்கள, நான் இந்த சந்திரமுகி 2 படத்தில், அதுவும் சந்திரமுகியாக வரும் அந்த ராணியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அவராகவே விரும்பி சந்திரமுகி 2 படத்தில் கமிட் ஆகியுள்ளார் கங்கனா.

இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தை கையில் எடுத்த பி. வாசு, ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவ லாரன்ஸை நடித்து வருகிறார், தற்பொழுது சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதில் வேட்டையன் கதாபாத்திரம் மட்டும் சுமார் 45 நிமிடங்கள் வரை இந்த படத்தில் இடம் பெறுவதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இந்த படத்தை மிஸ் செய்து விட்டோம் என்ற மிகப்பெரிய வருத்தத்தில் தற்போது இருந்து வருவதாக கூறப்படுகிறது.