தமிழச்சி, கனிமொழி … அறிவில்லையா? மானமில்லையா? பொறுக்கியை காப்பாற்றுவதா.? சின்மயி ஆவேசம்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சினிமா திரைப்பட ஆசிரியர் வைரமுத்து குறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பிண்ணனி பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக குற்றசாட்டு வைத்த சின்மயி. எப்படி வைரமுத்துவால் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளனர் என்பதையும் பொது வெளியில் அம்பலப்படுத்தி வைரமுத்துவின் முக்திரையை கிழித்தார்.

சின்மயி தெரிவித்த சில தகவல் பலருக்கு அதிர்ச்சியை தரும் விதத்தில் அமைந்தது. அதில் ஓன்று தான் 18 வயது பெண்ணிடம் வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தது. பாடல்வரிகளை விளக்கும் சாக்கில் அவர் 18 வயது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதற்கு அந்த பெண் என்ன செய்வது என தெரியாமல், அவரது வீட்டிலிருந்து ஒடி விட்டதாக தனக்கு வந்த தகவலை பகிர்ந்து சின்மயி, ஒரு கட்டத்தில் வைரமுத்து தன்னை பாலியல் தொந்தரவு அளித்தது குறித்த தகவலையும் வெளியிட்டார்.

அதில் சில ஆவணங்களில் கையெழுத்திட வைரமுத்து அலுவலகத்துக்கு சின்மயி சென்றதாகவும், அப்போது, நான் உள்ளே சென்று கையெழுத்திட்டேன். அவர் தனது மேஜையின் ஒரு புறம் அமர்ந்திருந்தார் நான் மறுபுறம். அவர் தன் முனையில் இருந்து எழுந்து என்னிடம் வந்தார், நானும் மரியாதை நிமித்தமாக எழுந்தேன். அந்த நேரத்தில் அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்… நான் நடுங்க ஆரம்பித்தேன். என்னுடைய செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு விரைந்து கீழே ஓடினேன் என தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளியிட்டார் சின்மயி.

இந்நிலையில் வைரமுத்து மீது தொடர்ந்து வெளியான பாலியல் குற்றசாட்டு காரணமாக வெளியில் தலைகாட்டாமல் தலைமறைவாக இருந்து வந்தவர், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கேரளா அரசாங்கத்தால் அவருக்கு அந்த மாநிலத்தில் உயரிய விருதான ஒன்றை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி குரல் கொடுக்க அவருடன் இணைந்து கேரளா நடிகை பார்வதியும் வைரமுத்துக்கு கேரள அரசு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் கேரள முழுவதும் வைரமுத்துவுக்கு எதிராக உருவெடுத்ததை தொடர்ந்து கேரள அரசு வைரமுத்துவுக்கு அறிவித்த அந்த விருது கை நழுவி போனது. இந்நிலையில் தற்போது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சகம் சார்பில் அயலகத் தமிழர் நாள் என்ற நிழச்சியில் வைரமுத்து பேசியது குறித்து, பெண் எழுத்தாளர் ஷாலினி என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்ததாவது, அயலகத் தமிழர்களுக்கு: அறிவில்லையா? மானமில்லையா? பெண்கள் மீது அக்கறை இல்லையா? திமுக ஏன் இந்த ஆசாமியை இன்னும் சபை ஏற்றுகிறது? திமுகவில் கவிஞர் சல்மா, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் கனிமொழி என்று இத்தனை கவிஞர்கள், அதுவும் பெண்கள் இருக்கிறார்கள்….. குட்டி ரேவதி சுகீர்த்தராணி லீனா மணிமேகலை என்று எத்தனையோ கட்சி சாரா பெண் கவிஞர்களும் இருக்கிறார்கள்….

பின் எதற்காக இந்த கறைபடிந்த நபர் என வைரமுத்து அயலகத் தமிழர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ஷாலினியின் பதிவை பகிர்ந்த பின்னனி பாடகி சினமயி மாநில அரசு இது போன்ற கொடுமையான நபர்களுக்கு ஆதரவாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார் சின்மயி. மேலும் வலைதளவாசி ஒருவர் கருத்துக்கு பதிலளித்த சினமயி, பொறுக்கிகளை காப்பாற்றி கொண்டே இருக்கும் தமிழ் சமூகம் என வைரமுத்துவை கடினமாக தாக்கியுள்ளார்.