உபியில் பாஜக வென்றால் கங்கையில் உயிரை மாய்த்து கொள்வேன்.! சீப்பு செந்தில் சபதமா.? சமூக வலைதளத்தில் வைரல்..

0

சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்ட போது. சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என இந்திய அரசை கேலி செய்வது போன்று பதிவு செய்த பத்திரிக்கையாளர் செந்தில் இந்த சம்பவத்துக்கு பின்பு சீப்பு செந்தில் என பெயர் பெற்று பிரபலமடைந்தார். இதன் பின்பு பெரும் சர்ச்சையில் சிக்கிய சிப்பு செந்தில் தான் வேலை செய்த தனியார் தொலைக்காட்சியில் இருந்து அவர்கள் வெளியற்றுவதற்கு முன்பே தானாக வெளியேறினார்.

இதன் பின்பு தனியாக யூ டுயூப் ஒன்றை நடத்தி வரும் செந்தில் அதில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய செந்தில் பேசுகையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள். இந்த நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவர்கள் வைத்தது தான் சட்டம், அப்ப இந்த நிலைமையே கேவலமான நிலைமை, இந்த அமைப்பு முறை மாற வேண்டுமா.? இல்லையா.?

முதலில் எதை மாற்ற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் உத்தரபிரதேச, பீகார், மத்திய பிரதேசத்தில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். நாம் அனைவரும் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் இடத்திற்கு வந்துவிட்டோம். வேறு வழியில்லை அவன் ஓட்டை போட்டு விடுகிறான் நம்ம சிரமப்பட வேண்டியது இருக்கு. உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிடும்,

ஆகையால் அங்கே உத்தரபிரதேசத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களிடம் இங்கிருந்து நாம் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என செந்தில் பேசியது வைரலாகி வந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில். அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் செந்தில் குறித்த ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில்,உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை விழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப மாட்டேன். ஒரு வேலை பாஜக அங்கே மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியில் எனது உயிரை மாய்த்து கொள்வேன். இது என் தமிழ் மேல் ஆணை என்று பத்திரிகையாளர் செந்தில் சபதம் என தலைப்பிட்டு ஒரு செய்தி ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நாம் அனைவரும் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் இடத்திற்கு வந்துவிட்டோம் என செந்தில் குறிப்பிட்டிருந்த நிலையில்,

தற்போது செந்தில் சபதம் என தலைப்பிட்டு வெளியாகி உள்ள செய்தி உண்மையா.? பொய்யா.? என்கிற குழப்பத்தில் அந்த செய்தியை பார்ப்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த செய்தி உண்மையா.? பொய்யா.? என்பது குறித்து பத்திரிகையாளர் செந்தில் விளக்கம் அளித்து குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

அறிவாலயம் பக்கமே வர கூடாது.. சுந்தரவல்லி விரட்டியடிப்பா. கதறும் பிரசன்னா கண்டுகொள்ளாத திமுக ..