நாற்காலியை எட்டி உதைத்த அஜித்…. ஓட்டல் அறையில் அன்புசெழியனை தெறிக்கவிட்ட சம்பவம் உங்களுக்கு தெரியுமா.?

0

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அன்புச் செழியனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் கிடக்கு பிடி விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை காக்கும் கடவுள் என்று அழைக்கப்பட்டு வருகின்றவர் அன்பு செழியன்.

இந்நிலையில் வருமான வரி துறையில் அன்பு செழியன் சிக்கியுள்ளது, அடுத்தடுத்து தமிழ் படங்கள் வெளியாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்புச்செழியன் முடங்கினால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் முடங்கிவிடும் என்கின்ற அச்சமும் சினிமா துறையினர் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு முன்பு அன்புச்செழியன் – அஜித்குமார் இடையில் நடந்த மோதல் சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித்குமார். அதற்கான அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு, இந்த படத்தில் நடிப்பதற்காக நீண்ட தலை முடி வளர்த்து அதற்கான போட்டோ சூட் அஜித்தை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு தெரியாமலே இந்தப் படத்தில் திடீரென்று அஜித்துக்கு பதிலாக ஆர்யாவை உள்ளே கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பாலா.

நான் கடவுள் படத்திற்கு பைனான்ஸ் செய்திருந்தவர் அன்புசெழியன், இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் அஜித்தை நடுவில் அமர வைத்து, அன்புசெழியன் உட்பட சிலர் அஜித்தை சுற்றி வளைத்து அமர்ந்து பஞ்சாயத்து செய்துள்ளனர். இதில் இயக்குனர் பாலாவும் இருந்ததாக கூறப்படுகிறது. நான் கடவுள் படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி தரவேண்டும் என அன்பு செழியன் கேட்டுள்ளார்.

இதற்கு அஜித், நான் இந்த படத்தில் நடிக்க தயாராகத்தான் இருந்தேன். எனக்கே தெரியாமல் தான் வேறு ஒரு நடிகரை இந்த படத்தின் உள்ளே வந்துள்ளார். அதனால் என் மீது எந்த தவறும் கிடையாது. இருந்தும் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை உங்களுக்கு திருப்பி தருகிறேன். ஆனால் வட்டியுடன் திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அஜித்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில், வட்டியுடன் திருப்பி தந்தே ஆக வேண்டும் என அன்பு செழியன் மிரட்டியுள்ளார். கோபத்தில் எழுந்த அஜித் அங்கே இருந்த சேரை எட்டி உதைத்து, வாங்கிய அட்வான்ஸ் தொகையை இன்று இரவுக்குள் திருப்பி தருகிறேன். வட்டியுடன் திருப்பி தரமுடியாது, உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் அஜித்குமார்.

இதன் பின்பு அன்று இரவோடு இரவாக பணத்தை தயார் செய்து சமபந்தப்பட்டவர்களிடம், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துள்ளார் அஜித் குமார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அஜித் தாக்கப்பட்டார் என தகவல் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here