சிம்புவுக்கு நோ… சிவகார்திகேயனுக்கு யெஸ் சொன்ன இயக்குனர் ஷங்கர்… சிம்பு மீது என்ன கோபம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். மருத்துவம் படித்துள்ள அதிதி சங்கருக்கு சினிமாவில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆசை. ஆனால் தந்தைக்கு மகள் படித்த மருத்துவ துறையில் பணியாற்ற வேண்டும் என்கின்ற ஆசை. இருந்தும் மகளின் ஆசைக்காக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் ஷங்கர்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் அதிதி சங்கர். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் அதிதி சங்கர். பெரும்பாலும் முத்தையா படத்தில் நடிகைகளுக்கு கவர்ச்சி காட்சிகள் இருக்காது. மேலும் நடிகர் கார்த்தி எந்த ஒரு நடிகையுடன் கிசுகிசுக்களில் சிக்காதவர். இதன் காரணமாக விருமன் படத்தில் மகள் அதிதி சங்கரை நடிக்க சம்மதித்தார் ஷங்கர்.

ஆசைக்கு ஒரு படம் நடித்துவிட்டு மருத்துவ தொழிலை பார்க்க வேண்டும் என்ற மகளிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார் சங்கர். ஆனால் விருமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்க தொடங்கினார் அதிதி சங்கர். அடுத்து சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் ஒப்பந்தமானார் அதிதி சங்கர்.

ஆனால் இது அவருடைய தந்தைக்கு பிடிக்கவில்லை, இதற்கு காரணம் பல நடிகைகளுடன் சிம்பு கிசுகிசுவில் சிக்கியது தான் என்று கூறப்படுகிறது. இருந்தும் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக கொரனாகுமார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அதிதி சங்கர். ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக கொரனா குமார் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அதிதி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, இது குறித்து தந்தை ஷங்கரிடம் கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் சிவகார்த்திகேயன் என்ற உடன் உடனே ஓகே சொல்லிவிட்டார் சங்கர் என கூறப்படுகிறது.

இருந்தும் மகள் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை இயக்குனர் சங்கர் விரும்பவில்லை, அதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்துடன் போதும், மருத்துவ துறையில் கவனம் செலுத்த வேண்டும் என இயக்குனர் ஷங்கர் அவருடைய மகளை கட்டாயப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!