ஜீ தமிழில் இருந்து கரு. பழனியப்பன் வெளியேற்றமா.? இனி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா.?

0
Follow on Google News

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருந்து கொண்டு. தொலைக்காட்சியில் ஊடுருவி தங்கள் அரசியல் விருப்பு, வெறுப்புகளை அந்த நிகழ்ச்சி வாயிலாக அரங்கேற்றும் வேலையை தமிழக தொலைக்காட்சியில் பலர் செய்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. ஒரு அரசியல் கட்சி சார்ந்த தொலைக்காட்சியில் ஒரு சார்பாக செயல்பட்டால் பெரும்பாலும் யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.

நாடு நிலை தொலைக்காட்சி என தங்களை அடையாளப்படுத்தி, அதில் அரசியல் சார்ந்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவருக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்கும் பொழுது தான் பிரச்சனையாக உருவெடுக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நியூஸ் 18 தொலைக்காட்சியில் திராவிட சித்தாந்தம் கொண்ட திமுக ஆதரவாளரான, நெறியாளர் குணசேகரன், செந்தில் மற்றும் ஊழியர்கள் வரை பெரும்பாலும் அந்த ஊடகத்தையே இவர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

இதன் பின்பு அந்த நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கிய பின்பு தானாகவே, குணசேகரன், செந்தில் உட்பட ஒவ்வொருவராக அங்கே இருந்து வெளியேறினார்கள், தற்போது அதே போன்ற நிகழ்வு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ந்துள்ளது. பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி சட்ட சிக்கலில் எந்த தொலைக்காட்சி நிறுவனம் சிக்கியுள்ளது. இதன் பின்னனியில் திமுக ஆதரவாளர்கள் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஜீ தொலைக்காட்சி உள்ளே சென்ற பின்பு மெல்ல அவர் சார்த்த அரசியல் சித்தாந்தம் கொண்ட ஆட்களை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஊடுருவ உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சை கூறிய நிகழ்ச்சி தொடர்பாக ஜீ தொலைக்காட்சி நிறுவனம் இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பந்த பட்ட நபர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கரு. பழனியப்பன் குறித்தும் ஏகப்பட்ட புகார் வந்ததை தொடர்ந்து அவர் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேறு ஒரு பிரபலத்தை தேட ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எம்பிக்கள், ஜோதிமணி, சு.வெங்கடேசன் பொறுப்பற்ற செயலுக்கு பேராசிரியர் பதிலடி. இது இரண்டு புறமும் கூறுள்ள ஆயுதம்.. இது ஏற்புடையது அல்ல..