பெண் உதவி இயக்குனரை படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்… யார் அந்த காமெடி நடிகர் தெரியுமா.?

0
Follow on Google News

பெண்கள் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற தொடங்கி விட்டார்கள். அதே நேரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு சூழல் இந்த சமூகத்தில் பெரும்பாலான துறைகளில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இதற்காக பல துறைகளில் பெண்கள் பாதுகாப்பிற்காக விசாக கமிட்டி என்று ஒரு அமைப்பு இருக்கும்.

பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை இந்த விசாக கமிட்டி தீவிரமாக கண்காணிக்கும், அந்த வகையில் இன்று பெண்கள் மற்ற துறையில் சிறந்து விளங்குவது போன்று சினிமா துறையிலும் அதிக அளவில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இயக்குனர், கேமரா மேன், இசையமைப்பாளர் என்று சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றால் அதிகம் அளவு பெண்கள் பணியாற்றுவதை காண முடியும். அந்த வகையில் பல பெண்கள் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்கள். மேலும் பல பெண்கள் உதவிய இயக்குனராக பணியாற்றி வருகிறார்கள். ஒரு சில தயாரிப்பாளர்கள், தாங்கள் எடுக்கும் படத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு நடக்கின்றதா என்கிறதை தீவிரமாக கண்காணிக்க ஒரு குழு ஏற்படுத்தியிருக்கும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்த குழுவை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக செலவு செய்து இப்படி ஒரு குழுவை அமைத்திருக்கும். இந்த நிலையில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் காமெடி நடிகர் ஒருவர் அங்கே பணிபுரிந்த பெண் உதவி இயக்குனரிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அந்தப் பெண் காமெடி நடிகரிடம் காட்சிகளை விலக்கி சொல்லும் போதும், வசனங்களை எடுத்துக் கூறும் போதும், இந்த காமெடி நடிகர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது, டபுள் மீனிங்கில் பேசுவது போன்ற பாலியல் தொல்லைகளை கொடுத்து தன் வலையில் விழ வைக்க முயற்சி செய்து வந்துள்ளார். இருந்தும் அந்தப் பெண் சகித்துக் கொண்டு தொடர்ந்து தனது வேலையை செய்து கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த காமெடி நடிகர் நேரடியாக அந்த பெண் இயக்குனரிடம் இன்று இரவு என்னுடைய வீட்டிற்கு வா என்று அழைத்துள்ளார். இதைக் கேட்டு ஷாக்கான அந்த பெண் உதவி இயக்குனர், அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பில் புகார் தெரிவித்துள்ளார், ஆனால் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இது போன்று நடப்பது சகஜம் என்பது போன்று சொன்னவர்கள்.

அந்த பெண் உதவி இயக்குனரிடம், இனிமேல் நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டாம். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடக்கும் சமயத்தில் டப்பிங், எடிட்டிங் வேலை நடக்கும்போது வந்தால் நீங்கள் போதும் என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். இருந்தும் சினிமா துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது பலருக்கு வருத்தமளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?