யார் வீட்டு அப்பன் பணம் இது.? போலீஸ் மூலம் 30 லட்சம் மேட்டரை கண்டுபிடித்த முத்து… சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து சுவாரசியம்…

0
Follow on Google News

மனோஜை ஏமாற்றிவிட்டு 27 லட்சத்தை ஆட்டைய போட்டுவிட்டு கனடா சென்ற ஜீவாவை கையும் களவுமாக பிடித்து 27 லட்ச ரூபாய்க்கு 30 லட்சமாக வட்டியுடன் மனோஜும் ரோகிணியும் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது காவல் நிலையத்தில் ஜீவாவுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாமல் ஜீவாவுக்கு ஆதரவாக கையெழுத்து போடுகிறார் முத்து. இந்நிலையில் ஜீவா தொடர்ந்து பல போர்ஜரி வேலைகளை செய்து கொண்டு இருக்கையில் மீண்டும் ஒரு நபர் ஜீவாவால் ஏமாற்றப்படுகிறார்.

அந்த நபர் காவல் நிலையத்தில் ஜீவா மீது புகார் தெரிவிக்கிறார் காவல்துறை ஜீவாவை தேடும் முயற்சியில் இறங்குகிறார்கள், ஆனால் ஜீவா எங்கே இருக்கிறார் எப்படி பிடிப்பது என்று காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டபோது, ஏற்கனவே இந்த பொண்ணு ஒரு பிரச்சினையில் சிக்கி அதற்கு டாக்ஸி டிரைவர் முத்து தான் கையெழுத்து போட்டார். அந்த முத்துவிடம் விசாரித்தால் ஜீவாவை கண்டுபிடித்து விடலாம் என முத்துவிடம் சென்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

அதற்கு முத்து இந்த பெண் எனக்கு யார் என்று தெரியாது. அவங்க என்னுடைய டாக்ஸில வந்தாங்க அதனால நான் கையெழுத்து போட்டேன். இந்த் பெண் என்ன செய்தது என போலீசாரிடம் முத்து கேட்க. அந்த பொண்ணு ஒருத்தன கல்யாணம் பண்றேன்னு சொல்லி 27 லட்ச ரூபாயை ஏமாத்திட்டு கனடா ஓடிப்போச்சு, அதுக்கப்புறம் திரும்ப இங்க வரும்போது அந்த 27 லட்ச ரூபாய் ஏமாத்திட்டு போன பையனும் அந்த மனைவியும் தான் அவங்கள புடிச்சு ஸ்டேஷன்ல எங்களுக்கு ஸ்டேஷனில் ஒப்படைத்து.

அந்த பெண்ணிடம் இருந்து வட்டியும் முதலும் சேர்த்து 30 லட்சம் வாங்கி கொடுத்தோம் அப்படின்னு காவல்துறை அதிகாரிகள் சொல்லி, அந்த பொண்ணுக்காக தான் ஆதரவாக நீ கையெழுத்து போட்ட அன்று என போலீசார் தெரிவிக்கிறார். உடனே முத்து, என்னாது 27 லட்ச ரூபாய, அந்த பொண்ணு ஒரு நபரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு ஆட்டைய போட்டுட்டு கனடா போயிடுச்சா.! என் அண்ணனுக்கும் இதே மாதிரி தான் ஒரு நிகழ்வு நடந்துச்சு அப்படின்னு யோசிக்கும் முத்து.

அந்த காவல்துறை அதிகாரியிடம் அந்த 27 இலட்சம் ரூபாய் ஏமாந்த பேர் தெரியுமா என போலீசாரிடம் கேட்க, அதற்கு அவர் பெயர் மனோஜ் அவங்க மனைவி பேரு ரோகிணி என போலீஸார் தெரிவிக்க, அப்ப அந்த மனோஜும் ரோகிணியும் பணத்தை திரும்பி வாங்கி விட்டார்கள் என்று தெரிந்ததும். எங்க அப்பா பணத்தை திருப்பி வாங்கிட்டு, அந்த பார்லர் அம்மா, அவங்க அப்பா மலேசியாவில் இருந்து அது ஜெயிலுக்குள்ள இருந்து அனுப்புனதா டுபாக்கூரா விடுது என முத்துவுக்கு விஷயம் தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து காவல்துறையை அதிகாரி முத்து கையில் ஜீவாவின் புகைப்படத்தை கொடுத்து இந்த போட்டோ வச்சு விசாரிங்க என முத்துவின் கையில் கொடுத்து விட்டு செல்கிறார். உடனே முத்து உடனே வீட்டுக்குள் சென்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அழைக்கிறார். நம்ம எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருக்காங்க பார்லர் அம்மா அப்பா மலேசியாவில் இருந்து பணமே அனுப்பல.

இது உங்க பணம் அப்பா. 27 லட்ச ரூபாய் தூக்கிட்டு கனடாவிற்கு ஓடின பெண்ணிடம் அந்த பணத்தை வட்டியுடன் 30 லட்சம் வாங்கி இருக்காங்க. நம்மள எல்லாம் ஏமாத்தி பார்லர் அம்மா அப்பா அந்த பணத்தை மலேசியாவில் இருந்து அனுப்பியதா சொல்லி ஏமாத்திட்டு இருக்காங்க என முத்து சொல்ல. உடனே எல்லாரும் ஷாக் ஆகிறார்கள். அப்போது மனோஜ் உறைந்து நிற்க, ரோகினி மட்டும் ஏன் இப்படி அபாண்டமாக பேசுறீங்க எங்களுடைய வளர்ச்சி உங்களுக்கு பிடிக்கல.

அந்த பொறாமையில நீங்க பேசுறீங்க இதுக்கான ஆதாரம் உன்கிட்ட இருக்கா என ரோகினி கேட்க. உடனே முத்து ஜீவாவின் புகைப்படத்தை ரோகினி இடம் காட்ட பேச்சு மூச்சு இல்லாமல் அமைதியாகிறார், அடுத்த சிறிது நேரத்தில் முத்துவை விசாரித்த அதே காவல் துறை அதிகாரி அங்கே மனோஜ் ரோகினி தேடி வீட்டிற்கு வருகிறார். அங்கே முத்துவை பார்த்து என்னப்பா நீ எங்க இருக்க என கேட்க.

அதற்கு இதுதான் சார் என் வீடு. நீங்க சொன்னீங்களே மனோஜ் ரோகினி, அந்த மனோஜ் எங்க அண்ணன் தான். உடனே போலீசார் மனோஜ் ரோகிணியை பார்த்து, உங்களை தான் பார்க்க வந்தேன் உங்களை ஏமாத்திட்டதா சொன்ன ஜீவாவிடம் பணத்தை திருப்பி வாங்குனீங்க இல்லையா.? இப்ப அவங்க மேல ஒரு கேஸ் வந்திருக்கு. அவங்கள பத்தி ஏதாவது உங்களுக்கு தெரியுமா.? எங்க இருக்காங்கன்னு தெரியுமா என்று உன்கிட்ட விசாரிக்க வந்தேன் என போலீசார் போட்டு உடைக்க. அடுத்தடுத்து சிறகடிக்க ஆசையில் ரோகினி அவமானம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறுவாரா.? அல்லது எப்படி சமாளிக்க இருக்கிறார் போன்ற விறுவிறுப்பான காட்சிகள் எல்லாம் இனி வரும் காலங்களில் அரங்கேற இருக்கிறது.