களத்தில் இறங்கிய திருச்சி சூர்யா… சவுக்கு சங்கருக்கு இடியாய் விழுந்த ஆப்பு… கடைசி வரை ஜெயில் தானா.?

0
Follow on Google News

பெண் காவலர்களை அவதூறு பரப்பு வகையில் பேசிய சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல இடங்களில் வழக்கு பதிய பட்டுள்ள நிலையில், அவர் மீது மேலும் கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூகத்தினர் தெய்வமாக வணக்க கூடிய பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் ஜெயந்தி விழாவை இழிவு படுத்தும் விதத்தில் பேசியதாக மேலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பாய தொடங்கியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருக்க கூடியவரும், பாஜகவின் முக்கிய தலைவருமான திருச்சி சூர்யா சவுக்கு சங்கருக்கு எதிராக அதிரடியாக களத்தில் இறக்கியுள்ளது, சவுக்கு சங்கருக்கு மிக பெரிய ஆப்பு விழுந்தது போன்று அமைத்துள்ளது. திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா புகார் கொடுத்துள்ளார், அதாவது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குறித்தும் முக்குலத்தோர் சமூகம் குறித்தும் தெளிவான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய திருச்சி சூர்யா.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்றும், மேலும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் வேலைக்குச் செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் இதற்கு முன்பு பேசியதாக குற்றம் சாட்டுகளை முன்வைத்த திருச்சி சூர்யா, பொது நிறுவனங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களை வேலைக்கு எடுப்பதற்கு யோசிப்பதாக சவுக்கு சங்கர் பேசியுள்ளதையும்,

மேலும் பசும்பொன் தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு அசௌரிகாரியமான சூழ்நிலை ஏற்படுவதாக போன்ற கருத்துக்களை சவுக்கு சங்கர் இதற்கு முன்பு பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தையும், தெய்வமாக வணங்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசி இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த திருச்சி சூர்யா,

இதனால் ஜாதி கலவரங்கள் தூண்டுவதற்கும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் முயற்சியில் சவுக்கு சங்கர் ஈடுபட்டுள்ளார், இது தொடர்பாக பாஜக ஓபிசி அணி சார்பாக காவல் துறை கண்காணிப்பாளர் இடம் புகார் கொடுத்ததாக தெரிவித்த திருச்சி சூர்யா அதற்கு சட்டம் படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்ததாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக தரப்பில் இருந்து சவுக்கு சங்கர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது, இந்நிலையில் பாஜக தரப்பில் இருந்தும் அதுவும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருக்க கூடிய முக்கிய தலைவர்களின் ஒருவரான திருச்சி சூர்யாவே நேரடியாக சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்துள்ளது, சவுக்கு சங்கருக்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இப்படியே சவுக்கு சங்கர் மீது புகார் மேல் புகார் அதிகரித்து கொண்டு வழக்கு மேல் வழக்கு அதிகரித்தால் கடைசி வரை சவுக்கு சங்கருக்கு ஜெயில் தானா என்கிற கருத்தும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.