கமல்ஹாசன் இருக்கும் மேடைக்கு வரமாட்டேன் என புறக்கணித்த ரஜினி… ரஜினிக்கு பதில் தோனிக்கு அழைப்பு…

0
Follow on Google News

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நான்கு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சபாஷ் நாயுடு என அவர் துவங்கிய திரைப்படமும் ட்ராப்பானது. மேலும் கமல் அரசியலில் களமிறங்கியதால் இனி அவர் படங்களில் நடிக்கமாட்டார் என்றெல்லாம் பலர் பேசி வந்தனர். அந்த சமயத்தில் தான் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் கமல். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்தார் கமல்.

இப்படத்தை அவரே ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்தும் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று கமலை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார். ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் துவங்கிய கமல் பிரபாஸின் நடிப்பில் உருவாகும் கல்கி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் கமிட்டாகினார்.

அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் கமல். நாயகன் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்நிலையில் தக்லைப் திரைப்படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் கமல் நடிக்கவுள்ளார். இதையெல்லாம் தாண்டி கமல் பல படங்களை தயாரித்தும் வருகின்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது. பலரும் இப்படம் கைவிடப்பட்டதாக நினைத்துக்கொண்டிருந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கினார். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இந்திய நாட்டின் மேல் தேசப்பற்று கொண்ட ஒருவர் இந்திய விடுதலைக்காக போராடுகிறார், பின்னர் இந்தியாவிற்கு விடுதைகிடைத்த பின்னர் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவரும் இவர் இந்தியாவில் நடக்கும் லஞ்சம் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் பாதிக்கப்படுகிறார். பின்னர் வயது முதிர்ந்து இருக்கும் இவர் எவ்வாறு இவைகளை எதிர்த்து போராடுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் தான் தற்போது உருவாகியுள்ளது.இந்தியன் 2 படத்தின் டிஜிட்டல் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோலிவுட்டில் அனைவரும் மிக ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இந்தியன் 2 ஆகும்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த ஐ.பி.எல். போட்டியில் கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு வர வேண்டும் என ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால், ‘அங்கு முழுக்க கமல் ரசிகர்கள் இருப்பார்கள். நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் எதாவது கமெண்ட் அடித்தால் அது எனக்கும் சங்கடமாகி விடும். கமலுக்கும் சங்கடமாகி விடும்’ என சொல்லிவிட்டாராம் சூப்பர்ஸ்டார். அதேநேரம், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனியை வரவழைக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறார். தோனி சமீபத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். எனவே, இந்தியன் 2 விழாவில் அவர் கலந்து கொண்டால் ஆச்சர்யம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.