தமிழகத்தில் பாஜகவுக்கு 8 இடங்கள்… தமிழக அரசியலை புரட்டி போட போகும் மேஜிக்… வெளியான முக்கிய தகவல்…

0
Follow on Google News

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இப்போதே வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற முடிவுக்கு ஊடகங்களும் அரசியல் வல்லுநர்களும் வந்துவிட்டார்கள். 400 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது பாஜக! கூடவே, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக எழுச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

இருப்பினும், தற்போது வெளியான தகவல் எதிர்க்கட்சிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏனென்றால், பாஜக தமிழ்நாட்டில் 5 முதல் 8 சீட்டுகள் ஜெயிக்கும் என அரசியல் திறனாய்வாளர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். திமுக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 சீட்டுகள் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் திமுகவுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது, இரண்டாம் இடத்தை பிடிப்பதில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது, அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தன்னுடைய தலைமையில் கூட்டணியை உருவாக்கி ஏற்கனவே ஐந்து விழுக்காடு வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தன் பக்கம் இழுத்து வலுவான அணியுடன் களமிறங்கியது பாஜக! இது போதாது என, மாநில தலைவர் அண்ணாமலையே நேரடியாக கோவை தொகுதியில் போட்டியிட்டு அதை ஸ்டார் தொகுதியாக மாற்றினார்.

மேலும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவியை தூக்கி வீசிவிட்டு தென் சென்னையில் களமிறங்கினார் தமிழிசை சௌந்தரராஜன்! இப்படி, பல முக்கிய தொகுதிகளில் களமிறங்கி ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கே டஃப் கொடுத்தனர் பாஜகவினர்! தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலேயே 15 விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பாஜக கூட்டணி பெறும் என உறுதியான நிலையில்.

ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேர்தல் முடிவுகள் மீதான கணிப்பின் போக்கே மாறிவிட்டது. 5 முதல் 8 இடங்கள் வரை, பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெறும் இடத்திற்கு வளர்ந்து விட்டது. 2019 தேர்தல் வரை 3.3% விழுக்காடு வாக்கு வங்கியை மட்டுமே கொண்டிருந்த பாஜக, தற்போது 2021ல் மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தலைமையில் அசுர வளர்ச்சி அடைந்து, இரண்டாவது பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் உருவெடுத்துள்ளது.

இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல், அண்ணாமலை தலைமையிலான பாஜகவிற்கு சென்றுள்ளது. ஏனெனில், அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருக்கும் அதிமுகவை விட அனுதினமும் திமுகவிற்கு எதிராக பத்திரிகையாளர்களை சந்திப்பது, அறிக்கைகள் விடுவது என திமுக விற்கு எதிரியாக பாஜக தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்தி கொண்டுள்ளது.

ஆகையால், திமுக வேண்டாம் என நினைப்பவர்கள் அதிமுகவை விட்டு பாஜக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். மேலும், மத்தியில் மோடி தான் வெற்றி பெறுவார் என தெரிந்ததால் மாநிலத்திலும் பாஜக வென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் மக்களிடம் உருவானது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த போதும், வட மாநிலங்கள் வரை சென்று பாஜகவிற்காக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் அண்ணாமலை.

2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள், இனி அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடிப்படையாக அமையப்போகிறது. கூடுதலாக தமிழகத்திலிருந்து வெற்றி பெற்று டெல்லி செல்லும் பாஜக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும் கட்டாயம் வழங்கப்படும் என்பதால், பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்தில் பாஜகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.