சட்டை போடாம வருவேன் நீ… ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஆதரவாக களத்தில் குதித்த சின்மயி…

0
Follow on Google News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் இது படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் ஐஸ்வர்யா பேசினார் என்று கூட விமர்சனம் எழுந்தது.

சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை கூறிய வகையில் பேசுகையில், கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் – பெண் என்கிற வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் தெரிவிக்கவில்லை, சில சட்டங்கள் தான் இது போன்ற நடைமுறையை உருவாக்கியிருக்கிறது என பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை என தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன்.

பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது என எந்தக் கடவுளும் தெரிவிக்கவில்லை, அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது என ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இதில் வலைதளவாசி ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆண் – பெண் என்கிற வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது என பேசியதற்கு ஆண் பெண் வித்தியாசம் இல்லையா.? நான் சட்டை போடாம வெளிய வருவேன் நீயும் வரியா…? என ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பேசியதற்கு பதில் கொடுத்து இருந்தார், இதற்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மிக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி, வலைதளவாசி, நான் சட்டை போடாம வெளிய வருவேன் நீயும் வரியா.? என ஐஸ்வர்யா ராஜேஷிடம் கேள்வி எழுப்பியதற்கு, கடுமையான தன்னுடைய பதிலடியை கொடுத்துள்ளார், சின்மயி தெரிவிக்கையில், எந்த அறிவிலி இந்த ‘நான் சட்ட போடாம வருவேன் நீயும் வருவியா’ன்னு முதல்ல ஆரம்பிச்சானோ அவன பிடிச்சு வகுப்பு எடுக்கணும். என தெரிவித்த சின்மயி.

மேலும் ஒரு நச்சு ஆணாதிக்க சமூகம் ஆண்களின் பார்வைக்காக பெண்களின் பாலூட்டி சுரப்பிகளை பாலுறவுபடுத்துகிறது, இந்த துப்பட்டா போடுங்க டோலி கும்பல் துள்ளிக்குதித்துக்கொண்டே இருக்கிறது என பதிலடி கொடுத்த சின்மயி, கடவுள் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார்.