சார் பிளீஸ்… கதறி அழுத நயன்தாரா… கண்டுகொள்ளாத அஜித்.. லண்டனில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ் சிவன், இந்த படத்திற்கு பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார், இந்த படத்தில் நடித்த போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.

இருந்தும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த விக்னேஷ் சிவன், சும்மா இருப்பதற்கு பதில் நயன்தாராவின் முழு நேர உதவியாளராக மாறினார், இடையில் நயன்தாரா சிபாரிசில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கம் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன், ஆனால் இந்த படம் மிக பெரிய பிளாப் அடைந்ததும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் விக்னேஷ் சிவனுக்கு அமையவில்லை.

இப்படி நயன்தாரா சிபாரிசில் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்த தவறியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் மீண்டும் நயன்தாரா சிபாரிசில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன். பல இயக்குனர்கள் அஜித் படத்தை இயக்குவதற்கு போட்டி போட்டு காத்திருக்கும் நிலையில், நயன்தாரா சிபாரிசில் எளிதாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் விக்னேஷ் சிவன்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் இயக்குவது உறுதி செய்யப்பட்டு, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்து படப்பிடிப்புக்கு தயாராக இருக்க விக்னேஷ் சிவனை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து படத்தின் முழு கதையை கேட்ட அஜித், செம்ம டென்ஷனில் இது என்ன குப்பை கதை என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து லண்டனின் விக்னேஷ் சிவன் , லைக்கா தரப்பு, மற்றும் நடிகர் அஜித் இவர்களுக்கு இடையில் நடந்த சந்திப்பில் விக்னேஷ் சிவன் இந்த ப்ரோஜெட்டில் இருந்து வெளியேற்ற படுவது என முடிவு செய்யப்பட்டது. உடனே லண்டனில் இருந்து மனைவி நயன்தாராவை தொடர்பு கொண்டு அங்கே நடந்த விஷயத்தை தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார், உடனே நான் பேசுகிறேன் என தெரிவித்த நயன்தாரா.

உடனே லைக்கா தரப்பினரையே தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா, நீங்கள் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை வெளியேற்றினால், அது எங்களுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும். மேலும் எங்களுடைய எதிர்காலமே இதில் தான் அடங்கியுள்ளது. ஆகையால் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு தாருங்கள் என நயன்தாரா பேசியுள்ளார், ஆனால் அதற்கு லைக்கா தரப்பு மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து லண்டனில் இருக்கும் அஜித்தை தொடர்பு கொண்டு அவரை கன்வின்ஸ் செய்து விடலாம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா. லைக்கா தரப்பில் பேசியது போன்று அஜித்திடம் பேசியுள்ளார். ஆனால் அதற்கு அஜித், என்னுடைய ரசிகர்களை நான் திருப்திப்படுத்தும் வகையில் கதைகளை தேர்வு செய்ய வேண்டும், அந்த வகையில் இது போன்ற ஒரு குப்பை கதைகளில் நான் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் அடைவார்கள்.

அதே போன்று என்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் ஏற்படும் வகையில் கதையை நான் தேர்வு செய்ய கூடாது என அஜித் தெரிவிக்க, ஒரு கட்டத்தில் நயன்தாரா, ப்ளீஸ் சார் என, கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு சென்றுள்ளார் நயன்தாரா, ஆனால் அஜித் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே முடிவோடு நயன்தாரா கோரிக்கையை கண்டு கொள்ளாமல் தொலைபேசியை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.