ஜேம்ஸ் வசந்த் பழைய சம்பவங்களை தோண்டி எடுத்து வெச்சு செய்யும் இளையராஜா ரசிகர்கள்..

0
Follow on Google News

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில்,இளையராஜா மாதிரி ஒரு மட்டமான ஆளை பார்க்கவே முடியாது, இளையராஜா ஒரு மனிதனாக மிகவும் மட்டமான ஒரு நபர், ஏனென்றால் கொஞ்சம் கூட முதிர்ச்சி இல்லாமல். ஒரு சாதாரண ஆளாக இருந்தால் நாம் இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை. சினிமா துறையில் பலர் அவரை சாமி என்று அழைப்பார்கள், நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சாமி சாமி என்று தான் இளையராஜாவை அழைப்பார்.

ஏனென்றால் அந்த அளவுக்கு இளையராஜா ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் ஆன்மீகத்தின் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் வெளியில் மிகவும் அசிங்கமாக கூடியவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிறிஸ்துவ மதத்தை பற்றி தவறாக பேசி அவர்களின் நம்பிக்கையை அசிங்கப்படுத்துவது போல் இளையராஜா பேசியிருந்தார். இவர் முட்டாள் போன்று அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் ஏசு கிறிஸ்து வாழ்ந்தாரா.? வந்தாரா.? உயிர்த்தெழுந்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இது அவருக்கு தேவையா.? என்ன சொல்ல வருகிறாராம், ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்த்தெழுந்தார, கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவன் முதிர்ச்சி உள்ளவன் இப்படி பேசுவானா, ஒரு பண்பு உள்ளவன் எவனாவது இப்படி பேசுவானா, கோடிக்கணக்கான மக்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள், அப்படியானால் அத்தனை நபர்களையும் நாம் காயப்படுத்த வேண்டுமா.? என ஜேம்ஸ் வசந்த் ஒருமையில் இளையராஜாவை மிக கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு இருப்பது குறித்து அவரது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த செய்தியை குறிப்பிட்டு நீங்க யோக்கியன் வேஷம் போட வேண்டாம் என ஜேம்ஸ் வசந்தனுக்கு இளையராஜா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வரும் சம்பவம் தற்போது பொது தளத்தில் அரங்கேறியுள்ளது. 2014ம் ஆண்டு பல பெண்களுடன் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி சுகந்தி கொட்டிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது ஜேம்ஸ் வசந்த் மனைவி கொடுத்த புகார் மனுவில் தெரிவித்ததாவது. ஜேம்ஸ் வசந்தனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. விஜிபி பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவும் ஜேம்ஸ் வசந்தனும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.. முதல் மனைவி உயிருடன் இருக்கையில் விவாகரத்து வாங்காமல் எப்படி இன்னொரு பெண்ணை மனைவி ஆக்கிக் கொள்ளலாம் எனவே சட்டநடவடிக்கை எடுக்கும்படி சுகந்தி புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதே போன்று 2013ம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். இது தொடர்பாக அப்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நிருபர்களிடம் பேசியபோது, என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.

எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். என ஜேம்ஸ் வசந்த் அப்போது தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் தற்பொழுது இளையராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்ததற்காக ஜேம்ஸ் வசந்தன் மீது உள்ள பழைய புகார்களை தோண்டி எடுத்து வந்து நீ பெரிய யோக்கியனா என இளையராஜா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.