தன்னை டேமேஜ் செய்தவர்களுக்கு… தரமாக பதிலடி கொடுத்த இளையராஜா..

0
Follow on Google News

சமீப காலமாக இளையராஜா குறித்த சர்ச்சை தொடர்ந்து மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இளையராஜா வாயை திறந்து பேசினாலே, அது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் உச்சகட்டமாக இயக்குனர் மனோபாலா மறைந்த போது இளையராஜா தெரிவித்த இரங்கல் செய்தியில், எத்தனையோ இயக்குனர்கள் எனக்காக கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் காத்திருந்தர்வர்களில் மனோபாலாவும் ஒருவர் என இளையராஜா தெரிவித்து இருந்தார்.

இது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது, இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட இளையராஜா மீது ஏற்கனவே வெறுப்பில் இருந்தவர்கள், இளையராஜாவை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு இறங்கி டேமேஜ் செய்தனர். இந்நிலையில் தன்னை பற்றி வரும் பல்வேறு விமர்சனகளுக்கு பதிலடி தரும் விதத்தில், பேட்டி ஒன்றில் இளையராஜா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தனக்கு எதிராக பேசி வருகின்றவர்களுக்கு சரியான பதிலடியாக அமைத்துள்ளது.

இளையராஜா அந்த பேட்டியில் பேசுகையில், நான் கிராமத்தில் இருந்தபோது இசையை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பே எனக்கு இல்லை, அண்ணன் பாடுவதை கேட்டு கேட்டு தான் இசை என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன். அதேபோன்று அண்ணனுடன் கச்சேரிக்கு செல்லும்போது எனக்கு மியூசிக் தெரியுமா.? என்றால் அப்போதும் தெரியாது.

நான் சென்னைக்கு இசை கற்றுக்கொள்ள தான் வந்தேனே தவிர, இசை அமைப்பாளராக வேண்டும் என்கின்ற நோக்கத்தில் வரவில்லை. அதே போன்று எனக்கு பட வாய்ப்பு கிடைத்த பின்பு எனக்கு இசை பற்றி தெரியுமா.? என்று கேட்டால் அப்போதும் எனக்கு தெரியாது. ஒரு மேடையில் நடிகர் பார்த்திபனிடம் உனக்கு இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்டதெல்லாம், என்னை நானே கேட்டுக் கொண்டது தான்.

ஆனால் அது வெளியில் வேற யாரோயோ கேட்டது போன்று தெரிகிறது. மியூசிக் எனக்கு தெரியாது, உண்மையிலேயே தெரியாது, அப்படி இசையைப் பற்றி எனக்கு தெரிந்திருந்தால், நான் மியூசிக் போடுவதை நிறுத்திவிட்டு, எனக்கு மியூசிக் தெரியும் என்று போயிட்டே இருக்கலாம், ஆனால் எனக்கு இசையை பற்றி தெரியாது என்பதால் தான், அதன் மீது இன்னும் எனக்கு ஆர்வம் இருக்கிறது.

எப்படி ஒரு தென்றல் அடித்துக் கொண்டிருக்கிறதோ, எப்படி ஒரு அறிவு ஓடிக் கொண்டிருக்கிறதோ, எப்படி ஒரு குருவி பறந்து கொண்டிருப்பதோ, அதுபோல தான் நானும் சென்று கொண்டிருக்கிறேன். ரோட்டில் நாம் நடந்து சென்றோம் என்றால் வெயில் நம் மீது அடிக்கத்தான். எனக்கு நானே எந்த ஒரு கட்டுப்பாடையும் விதித்து கொள்வது கிடையாது.

மற்றவர்களுக்கு இசை என்பது ஒரு வேலை ஆனால் எனக்கு இசை என்பது வாழ்க்கை. நான் ஒவ்வொரு நொடியும் நான் இசையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் , வேண்டாத கற்களை நீக்கும் போது தான் ஒரு சிற்பம் உருவாகின்றது. அதே மாதிரி தான் ஒரு மனிதனின் வாழ்க்கையும். ஆரம்பத்தில் என்னை பற்றி கிசுகிசுகள் நிறைய வந்து கொண்டிருந்தது, என்னடா இது.? நம்மை பற்றி இப்படி இல்லாத, பொல்லாததெல்லாம் எழுதுகிறார்களே என தோன்றியது.

அதன் பின்பு தான் நான் உணர்ந்தேன் எதை நீ வேண்டாம் என்று நினைக்கின்றாயோ அதனால் உனக்கு துன்பமில்லை என்பதை உணர்ந்தேன். அதன் பின்பு தான் நான் பேப்பர் படிப்பது டிவி பார்ப்பதை நிறுத்தி விட்டேன். என்னுடைய வேலையில் நான் உண்மையாக இருப்பதால், என்னுடைய தரப்பில் இருந்து தான் நான் பேச முடியும், இதை நீங்கள் ஹெட் வெயிட்டாக எடுத்துக் கொண்டாலும் சரி.

பலரும் சொல்வதுதான் அவரு ரொம்ப ஹெட் வெயிட்டா இருக்கிறார் என்று. என்னை ஹெட் வெயிட் என்று ஒருவன் சொல்கின்றான் என்றால் அவனுக்கு எவ்வளவு ஹெட் வெயிட் இருக்க வேண்டும். நான் இசையுடன் தான் சென்று கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, மலை அடிக்கட்டும் புயல் அடிக்கட்டும் எதுவானாலும் சரி எனக்கு எதுவம் கவலை இல்லை என இளையராஜா பேசிய ஒவ்வொரு பேச்சும் சமீபத்தில் இளையராஜாவை கடுமையாக பேசியவர்களுக்கு பதிலடியாக அமைத்துள்ளது.