நடிப்பில் விருப்பம் இல்லை… குடும்பத்துடன் அஜித் எங்கே செட்டிலாக போகிறார் தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமலேயே காலம் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் தல எப்ப படபிடிப்பை தொடங்குவார், அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், நாம் எப்போது கொண்டாடலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று மறுபக்கம் முழு கதையையும் தயார் செய்வது விட்டு இயக்குனர் மகிழ்திருமேனி படப்பிடிப்பு தொடங்குவதற்கான காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

வாரிசு – துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியானது. வாரிசை தொடர்ந்து விஜய் நடிக்கும் லியோ படத்துடன் அஜித் நடிப்பில் விடாமுயற்சியும் தொடங்கப்பட்டிருந்தால், இந்நேரம் விடாமுயற்சியின் 70 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்திருக்கும். விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆனால் இன்னும் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படம் தொடங்கப்படாமலே இருக்கிறது, அஜித் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, அஜித் மேற்கொண்டு வரும் பைக் பயணம் குறித்து தான் அப்டேட் வருகிறது.அந்த வகையில் படப்பிடிப்பு பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் அஜித் வழக்கம்போல் பைக் பயணத்தையும் மேற்கொண்டு வந்து விடுகிறார்.

இந்த நிலையில் அஜித்துக்கு சினிமா மீது ஆர்வம் குறைந்து விட்டதாகவே பல விமர்சனம் செய்து வரும் நிலையில் ரசிகர்களின் கட்டாயத்திற்காக அவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காகவே சினிமாவில் படங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு துறைச் சார்ந்த ஒருவருக்கு அந்த துறையின் மீது ஆர்வம் குறையும் போது மற்றொரு துறையின் மீது கவனம் செல்லும்.

அந்த வகையில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது அஜித்துக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை என்பதால், தான் அவர் மிகவும் விரும்பி செய்யக்கூடிய பைக் பயணத்தை அடிக்கடி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித் மிக குறுகிய படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை கட்டாயத்திற்காகவே வேறு வழியின்றி அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறாரா என்கின்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அஜித் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் வருடத்திற்கு மூன்று பட கூட நடிக்கலாம், ஆனால் பைக்கில் வெளிநாடு சுற்றுப்பயணம், இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் என அவர் ஒரு வருடத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நேரங்களை விட, பைக்கில் பயணம் செய்யும் நாட்கள் தான் அதிகமாக இருக்கிறது, அந்த அளவுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்க்கையை ரசித்து வருகிறார் அஜித்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகவே நடிகர் அஜித் வெளிநாட்டில் செட்டிலாக போகிறார் என்கின்ற ஒரு தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதில் அஜித்தின் நீண்ட நாள் ஆசையான லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்கிற விருப்பத்திற்க்கு ஏற்ப, பல கோடி செலவில் மிக பிரம்மாண்டமான வீடு ஒன்று லண்டனில் அஜித் வாங்கி குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் செட்டிலான தான் எங்கே சென்றாலும் சுதந்திரமாக செல்லாமல், அந்த வகையில் எதிர்காலத்தில் லண்டனில் அஜித் செட்டிலாகும் திட்டம் இருந்தாலும் கூட, தன்னை தல தல என்று கொண்டாடும் ரசிகர்களுக்காக சினிமாவை விட்டு செல்லாமல் தொடர்ந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.