வடிவேலுவின் உச்சக்கட்ட அட்டூழியம்… டென்ஷனில் விஜய் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சில வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த வடிவேலு, தற்பொழுது சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். இருந்தும் அவருடைய ரீ- என்ட்ரி பெரிதாக கை கொடுக்கவில்லை. மேலும் வடிவேலுவின் அட்ராசிட்டியால், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் படாத பாடு பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் வடிவேலுவின் அட்டூழியம் நாளுக்கு நாள் படபிடிப்பில் அதிகரிக்க ஒரு கட்டத்தில் டென்ஷனான பி.வாசு அவரை முதலில் இங்கு இருந்து கிளம்பச் சொல்லுங்கள் என்று அருகில் இருந்த வடிவேலுவிடம் நேரடியாக சொல்லாமல் பக்கத்திலிருந்தவர்களிடம் தெரிவித்து வடிவேலு காதில் விழும்படி பேசி உள்ளார் இயக்குனர் பி வாசு.

உடனே வடிவேலு வந்து என்ன சார் என கேட்க, வடிவேல் முகத்தைக் கூட பார்க்காமல் தன்னுடைய இடது கையை அசைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பு போ… போ… இங்கிருந்து கிளம்பு போ… போ.. என்று அங்கே இருந்த பலர் மத்தியில் வடிவேலுவை அவமானப்படுத்தி உள்ளார் பி வாசு. இருந்தும் வடிவேலு பி வாசுவை சமாதானம் செய்ய முயற்சித்தும்.

வடிவேலு முகத்தை கூட பார்க்க பார்க்காமல் தன்னுடைய இடது கையை ஆட்டி கிளம்பு கிளம்பு, இங்கிருந்து கிளம்பு கிளம்பு என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் பி வாசு. இதனால் அந்த படப்பிடிப்பில் இருந்து உச்சகட்ட அவமானத்துடன் வடிவேலு வெளியேறியதாக தகவல் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் வடிவேலு இயக்குனர் பி.வாசுவிடம் அடக்கி வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து மிக பெரிய ஹிட் அடுத்த போக்கிரியில் இணைந்த விஜய் – பிரபுதேவா – வடிவேலு கூட்டணி மீண்டும் வில்லு படத்திலும் இணைந்தது. இந்நிலையில், வில்லு படத்தில் விஜய் – வடிவேலு இருவரும் சந்திக்கும் முதல் காட்சியை படமாக்கியுள்ளார் பிரபுதேவா. அதாவது மாட்டு வண்டியில் வரும் வடிவேலுவிடம் விஜய் லிஃப்ட் கேட்பது தான் அந்த சீன். கட்சியை விளக்கமாக வடிவேலுவிடம் தெரிவித்த இயக்குனர் பிரபு தேவா ஆக்சன் என்றதும், வடிவேலு சம்பந்தமே இல்லாமல் நடித்து உள்ளார்.

திரும்ப கட் சொல்லிவிட்டு, சார் சொன்ன மாதிரி நடிங்க என பிரபுதேவா வலியுறுத்தி உள்ளார். ஆனால் மீண்டும் வடிவேலு அந்த காட்சிகளில் வடிவேலு ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். அதாவது பிரபுதேவா சொல்லாததையெல்லாம் அவராகவே சொந்தமாக நடித்துள்ளார். இதனால் டென்ஷனான பிரபுதேவா ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே வடிவேலுவிடம் இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் வடிவேலு கொஞ்சம் கூட பிரபுதேவா சொன்னதை கேட்கவே இல்லையாம். மேலும், இப்படி நடித்தால் நல்லாதானே இருக்கு என பிரபுதேவா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். . இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பிரபுதேவா மீண்டும் டென்ஷனாகி வடிவேலுவை கண்டபடி திட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை எப்படி டைரக்ட் பண்ண வேண்டும் என ஒரு வருடமாக பிளான் செய்து ஷூட்டிங் வந்துள்ளேன். அதேபோல் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து ஸ்கிரிப்ட்டில் சேர்த்துள்ளேன். அதனால் உங்கள் இஷ்டத்துக்கு நடிக்க வேண்டாம் என வடிவேலுவுக்கு லெப்ட் ரைட் வாங்கியுள்ளார் பிரபுதேவா. அதன் பின்னரே வடிவேலுவும் அடங்கியுள்ளார். இந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த விஜய், வடிவேலு – பிரபுதேவா இருவரும் சண்டைப் போடுவதை பார்த்து செம்ம டென்ஷனில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.